publive-image

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக நேற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன. அதிமுக வரும் ஏப்ரல் ஐந்தாம் தேதி சொத்து வரி உயர்வு அரசாணையை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.

Advertisment

இந்நிலையில், சொத்துவரி உயர்வுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு கட்டடங்களுக்கான சொத்து வரியை உயர்த்தியது கண்டிக்கத்தக்கது. சொத்துவரி உயர்வு என்பது விலைவாசி உயர்விற்கும், பணவீக்கத்திற்கும் வழிவகுக்கக் கூடியது. அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும் சொத்துவரி உயர்வை முதல்வர் உடனே திரும்பப் பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.