Will dmk win Palani constituency

பழனி சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக சிட்டிங் எம்.எல்.ஏ. ஐ.பி. செந்தில்குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ரவி மனோகரன், அமமுக வேட்பாளர் வீரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் வினோத், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பூவேந்தன் ஆகியோர் போட்டி போடுகிறார்கள்.

Advertisment

திமுக வேட்பாளரான சிட்டிங் எம்எல்ஏஐ.பி.செந்தில்குமார், கஜா புயலால் பாதிக்கப்பட்ட கொடைக்கானல் மேல்மலை கீழ்மலைப் பகுதியில் உள்ள மக்களுக்கு உதவிகளை செய்தார். அதுபோல் கோடை நகருக்கு கூட்டுக் குடிநீர் கொண்டு வரவும் ஏற்பாடுகள் செய்தார். பழனி நகரில் உள்ள சிறு வியாபாரிகளுக்கு கடைகள் போடுவதற்கு ஏற்பாடுகள் செய்தார். ஐ.பி. செந்தில்குமார் தொகுதியில் வேகம்காட்டி வருகிறார் என்கிறார்கள் அத்தொகுதி மக்கள்.

Advertisment

Will dmk win Palani constituency

அதிமுகவில் களம் இறக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏகுப்புசாமியின் மகன் ரவி மனோகரன், தொகுதி மக்கள் மத்தியில் பெரிதும் அறிமுகம் இல்லாதவர். ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர் என்று களமிறக்கியிருக்கிறார். அத்தொகுதியில் சீட் பெற எதிர்பார்த்திருந்த அதிமுகவினருக்கு இது சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனால், தேர்தல் பணியிலும் வேகம் இல்லை என அத்தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அமமுக சார்பில் களமிறங்கியுள்ள வீர குமாருக்கு, தேமுதிகஓட்டுடன் கட்சி ஓட்டும் விழுவதின் மூலம்கணிசமான ஓட்டுகளை வாங்குவார் என்கிறார்கள் மக்கள்.