Advertisment

திருச்செங்கோடு தொகுதி திமுகவுக்கு கிடைக்குமா ? கூட்டணி கட்சி மல்லுக்கட்டு!

anna arivalayam

Advertisment

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணியில், அதன் தோழமைக் கட்சிகளுக்கான சீட்டுகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் பணி வேகமெடுத்துள்ளது. ஏற்கனவே முஸ்லீம் லீக் மற்றும் மனிதநேயமக்கள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.ஐ., சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகளிடம் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது திமுக.

இந்த நிலையில்,திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொ.ம.தே.க), நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு தொகுதியை உடும்பு பிடியாக கேட்கிறது. ஆனால், நாமக்கல் மாவட்ட திமுக நிர்வாகிகள் மத்தியில், "அதிமுகவில், அந்தத் தொகுதியின் யார் வேட்பாளர் என்பதை அதிமுக அமைச்சர் தங்கமணிதான் தீர்மானிப்பார். தங்கமணியின் மறைமுக பின்புலத்திலேயே கொ.ம.தே.க. இந்தத் தொகுதியைக் குறி வைக்கிறது. இதை உணராமல், இந்தத் தொகுதியை கொ.ம.தே.க.வுக்கு ஒதுக்கினால், அந்தத்தொகுதியில் தோல்வி உறுதி. அதனால், திருச்செங்கோட்டில் திமுகதான் நேரடியாக போட்டியிட வேண்டும்" என்ற குரல் எதிரொலிக்கிறது.

இதற்கிடையே,"திருச்செங்கோட்டின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், 1984 முதல் கட்சிப் பணியில் ஈடுபட்டு வரும் கட்சியின் சீனியரும்,மக்களிடம் செல்வாக்குமுள்ள கல்வியாளரான நாமகிரிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் கே.பி.ராமசுவாமிக்கு சீட் ஒதுக்கினால் திமுக இங்கு எளிதாக வெற்றிபெறும்" என்று நாமக்கல் மாவட்ட திமுகவினர் கட்சி தலைமைக்குத் தெரிவித்திருக்கின்றனர். இதனால் திருசெங்கோடுதொகுதி யாருக்குக் கிடைக்கும் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Assembly election
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe