Vaniyambadi

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர திமுக செயலாளர் சாரதி குமார். இவரது மனைவி ரம்யா. இவர் கடந்த வாரம் சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

Advertisment

அதில், தனது கணவர் சாரதிகுமாருக்கு அவரைவிட 15 வயது மூத்த பெண் ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும், தன்னுடைய திருமணத்தின்போது பெற்றோர் வீட்டில் இருந்து போடப்பட்ட நகைகள் அனைத்தையும் பறித்துவிட்டார், அந்த பெண்ணுடன் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisment

இந்தநிலையில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், வேலூர் மேற்கு மாவட்டம், வாணியம்பாடி நகரக் கழகப் பொறுப்பாளர் வி.எஸ்.சாரதிகுமார் குடும்ப சூழ்நிலை காரணமாக தனது பொறுப்பில் இருந்து விடுவித்துக்கொள்வதாக தெரிவித்ததன் காரணமாக, அவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். நகரக் கழகப் பணிகள் செவ்வனே நடைபெற பொறுப்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.