Advertisment

அதற்குள் ஏன் இந்த அவசரம்?-தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

Why this urgency in that? -Supreme Court question to the Government of Tamil Nadu!

Advertisment

3 கோடி ரூபாய் மோசடி வழக்கில் நேற்று கர்நாடகா ஹசன் பகுதியில் கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜியை விருதுநகர் அழைத்து வந்து விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர். ராஜேந்திர பாலாஜிடம் மதுரை சரக டிஐஜி காமினி, விருதுநகர் எஸ்பி மனோகரன் விசாரணை நடத்தினர். ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைக்குப் பிறகு ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள சிவகாசி பிரதான சாலையில் உள்ள நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் 300க்கு மேற்பட்ட காவல்துறையினரின் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட ராஜேந்திரபாலாஜி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். ராஜேந்திர பாலாஜி தரப்பில், ''எங்களது முன்ஜாமீன் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது எனவே இந்த கைது நடவடிக்கையை முற்றிலுமாக கைவிட வேண்டும்" என நீதிபதி முன் அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால் அரசு தரப்பில், குற்றச்சாட்டுக்கள் உள்ளதால் 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டது.

KDR

Advertisment

கைது நடவடிக்கையை ரத்து செய்தால் வெளியூர் செல்லாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக ராஜேந்திர பாலாஜி தரப்பு கூற, 20 நாட்களாக வெளியூரில் இருந்தது ஏன்? என கேள்வி எழுப்பிய விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரம்வீர், ஜனவரி 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து அவர்திருச்சிசிறைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

Why this urgency in that? -Supreme Court question to the Government of Tamil Nadu!

முன்னதாகஉயர்நீதிமன்றம் ராஜேந்திரபாலாஜியின் முன்ஜாமீன் மனுவைதள்ளுபடி செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில், நேற்று அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில், 'ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை இன்று விசாரிக்க இருந்தோம்; அதற்குள் ஏன் இவ்வளவு அவசரம்;இது அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கா?' என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞரிடன் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில் 'நிச்சயமாக இல்லை' என்று பதிலளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியின் முன்னாள் உதவியாளர்கள் பாபுராஜ், பலராம், வழக்கறிஞர் முத்துபாண்டியனைகைது செய்ய இடைக்கால தடை விதித்துவழக்கு வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

TNGovernment supremecourt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe