Skip to main content

முதலமைச்சருடன் கைகோர்த்த தேஜஸ்வி யாதவ் தொடர்ந்து குறி வைக்கப்படும் காரணம் என்ன?

Published on 13/03/2023 | Edited on 14/03/2023

 

- தெ.சு.கவுதமன்

 

Why is Tejashwi Yadav, who joined hands with the Chief Minister, constantly targeted?

 

பீகார் மாநிலத்தின் லாலு பிரசாத் யாதவின் புதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீஹார் மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் முழுவீச்சில் வளர்ந்து வரும் இளம் தலைவராக இருக்கிறார். இன்னும் ஓராண்டு காலத்தில் அங்கே பொதுத்தேர்தல் வரவுள்ள சூழலில், அடுத்த முதல்வராக அவர் வரக்கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இவரை ஒழித்துக்கட்டுவதற்கான பல்வேறு முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

 

சமீபத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சென்றதிலிருந்தே தொடர்ச்சியாக பரபரப்புச் செய்திகளில் பேசப்பட்டு வருகிறார். தமிழ்நாடு முதல்வரின் பிறந்த நாளில் கலந்துகொண்டபோது, "நமது நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடைபெற்று வருகிறது. இதை நாம் அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும். பாஜக ஆட்சியில் நாட்டில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. வலுவான ஒரு மாற்றுச் சக்தியை உருவாக்க முதல்வர் ஸ்டாலினை இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. சமூகநீதியைப் போதிக்கும் தமிழ்நாட்டை பார்த்து மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். சோசலிசம் மற்றும் சமூகநீதி கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் சந்திக்கும் தளமாகத் தமிழ்நாடு மாறியுள்ளது. இங்கு பின்பற்றப்படும் சமூகநீதி கொள்கைகளை வட இந்தியாவில் இருக்கும் கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும்." என்றெல்லாம் பேசியிருந்தது தேசிய அளவில் முக்கியத்துவத்தைப் பெற்றது. 

 

இதையடுத்து, மு.க.ஸ்டாலினுக்கும், தேஜஸ்வி யாதவுக்குமான உறவை உடைப்பதற்கான வேலைகளில் ஒன்றிய அரசு மறைமுகமாக இறங்கியது. தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள், குறிப்பாக பீகாரைச் சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பப்பட்டது. உத்தரபிரப் தேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரசாந்த்குமார் உம்ராவ் என்பவர் பீகாரைச் சேர்ந்த 12 பேர் தமிழகத்தில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டதாக ட்விட்டரில் பதிவிட்டார். இதையடுத்து பீகாருக்கும் தமிழ்நாட்டுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவியது. இதைச் சரிப்படுத்த தமிழ்நாடு காவல்துறை துரிதமாகச் செயல்பட்டு வட மாநிலத் தொழிலாளர்கள் இங்கே நன்முறையில் பாதுகாப்புடன் இருப்பதாகவும் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எச்சரித்தது. 

 

தமிழ்நாட்டுக்கு பீகார் மாநில உயர் அதிகாரிகள் குழு வந்து வட மாநிலத் தொழிலாளர்களைப் பார்வையிட்டுச் சென்றனர். தமிழக முதல்வரும் பீகார் முதல்வர், துணை முதல்வரோடு தொடர்புகொண்டு வதந்திகள் குறித்து விவரித்தார். இங்கு வட மாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்போடு இருப்பதை எடுத்துரைத்தார். இதையடுத்து, பா.ஜ.க.வினர் வதந்தி பரப்புவதாகக் குற்றம் சாட்டிய தேஜஸ்வி யாதவ், தமிழ்நாடு அரசு நன்முறையில் செயல்படுவதாகப் பாராட்டினார். இதில் மேலும் பா.ஜ.க. தலைமை கடுப்பானது. இந்நிலையில், 2004 - 2009 காலகட்டத்தில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது, பீகார் முதல்வராக லாலுவின் மனைவி ராப்ரி தேவியின் ஆட்சியில் இவரது ஆட்சியின்போது இந்திய ரயில்வே துறையில் முறைகேடு செய்ததாகக் கூறப்படும் வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள், தேஜஸ்வி யாதவின் வீட்டிலும் அவரது சகோதரிகளின் வீட்டிலுமாக 24 இடங்களில் ரெய்டில் ஈடுபட்டனர். அவரது கர்ப்பவதியான மனைவி மிகவும் சிக்கலான சூழலில் இருப்பதையும் பொருட்படுத்தாமல் இந்த ரெய்டு நடத்தப்பட்டது.  

 

இந்நிலையில், இந்த சோதனையில் ரூ.70 லட்சம் ரொக்கம், 540 கிராம் தங்க கட்டிகள், 1.5 கிலோ தங்க நகைகள் மற்றும் 900 அமெரிக்க டாலர்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தகவல் கசியவிட்டது. ஆனால் இதெல்லாம் பொய்யான செய்திகள் என்றும் தங்களுக்கு எதிராகத் திட்டமிட்டு பொய்ச் செய்தியைப் பரப்புவதாகவும் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். லாலு பிரசாத் யாதவும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த ரெய்டுக்குப் பின்னால் தேஜஸ்வி யாதவ் மீதான மக்கள் செல்வாக்கு மேலும் அதிகரித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''ராகுல் காந்தியே வருக... புதிய இந்தியாவை தருக...''-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
"Rahul Gandhi come... bring a new India..."- Chief Minister M.K.Stal's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கோவை செட்டிபாளையத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி தற்பொழுது கோவை வந்துள்ள நிலையில் இருவரும் ஒரே மேடையில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''கோவை தொகுதியில் திமுகவினுடைய வேட்பாளராக போட்டியிடும் கணபதி ராஜ்குமார் இந்த மண்ணின் மைந்தர். கோவையின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காக பணியாற்றியவர். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். கரூர் நாடாளுமன்ற வேட்பாளர் ஜோதிமணிக்கு கை சின்னத்தில் வாக்களித்து வாக்களிக்க வேண்டும். வெற்றி என்றால் சாதாரண வெற்றி அல்ல மாபெரும் வெற்றியை தர வேண்டும். மார்ச் 24 ஆம் தேதி என்னுடைய பரப்புரை பயணத்தை திருச்சியில் தொடங்கினேன். ஒவ்வொரு கூட்டமும் மாநாடு போல நடந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இந்தக் கோவை பொள்ளாச்சி கூட்டத்தையும் வெற்றிவிழா மாநாட்டை போல ஏற்பாடு செய்துள்ள அமைச்சர் முத்துசாமி, சுவாமிநாதன் மற்றும் செந்தில் பாலாஜிக்கும் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கூட்டம் மாநாடு போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் இதற்கு இந்தியாவின் உடைய இளம் தலைவர் ராகுல் காந்தி மகுடம் வைத்தது போல இங்கே பங்கேற்றுள்ளார். நாடு சந்திக்க இருக்கக்கூடிய இரண்டாம் விடுதலைப் போராட்டத்தின் காங்கிரஸ் கட்சியினுடைய கைகளை திமுக வலுப்படுத்தும். திமுக எப்போதும் சோதனை காலத்தில் காங்கிரஸ் கட்சியோடு இருக்கின்ற கூட்டணி கட்சி. அதே நேரத்தில் எப்பொழுதும் வெல்லும் கூட்டணி நம் கூட்டணி. சோனியா காந்தி மீதும், சகோதரர் ராகுல் காந்தி மீதும் தமிழ்நாட்டு மக்கள் என்றும் தனியாக அன்பும் பாசமும் கொண்டவர்கள். அப்படிப்பட்ட ராகுலை நம்ம ஸ்டைலில் வரவேற்க வேண்டுமென்றால், 'ராகுல் அவர்களே வருக புதிய இந்தியாவிற்கு விடியல் தருக' என இந்தியாவின் தென்முனையான தமிழ்நாட்டில் இருந்து நான் வரவேற்கிறேன்.

பாஜக வந்தால் கோவையின் அமைதி போய்விடும். ஜி.டி.நாயுடு பெயரில் கோவையில் நூலக அரங்கம் அமைக்கப்படும். கோவை மெட்ரோ ரயில் திட்டம் திருப்பூர் வரை நீட்டிக்கப்படும். திமுக அரசின் நெருக்கடி காலத்திலேயே இவ்வளவு செய்கிறோம் என்றால் இந்தியா கூட்டணி வந்த பிறகு நிறைய செய்வோம். மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்களை திமுக அரசு கொண்டுவந்துள்ளது'' என்றார்.

Next Story

'மனதார துரோகம் செய்த கட்சிகள் அதிமுகவும் பாமகவும்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
DMK


நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் தேனி மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியில் தேனியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்கத்தமிழ்செல்வன் மற்றும் திண்டுக்கல்லில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது கூட்டத்தில் அவர் பேசுகையில், ''அதிமுகவை அழிக்கவெளியில் இருந்து ஆட்கள் வர வேண்டியதில்லை. இபிஎஸ், ஓபிஎஸ், தினகரனே போதும். பிரதமர்களை உருவாக்கும் இயக்கமே திராவிட முன்னேற்ற கழகம். தமிழ்நாட்டை மதிக்கும் மத்திய அரசு வேண்டும். கடந்த முறை தோற்ற தேனியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இந்த முறை வெல்ல வேண்டும். பாஜகவுடன் கூட்டணி இருந்த அதிமுகவினர் தங்களை ஊழல் வழக்கில் விடுவிக்க வேண்டும் என்று கேட்டனர். ஆனால் மத்தியில் கூட்டணியில் இருந்த போதெல்லாம் திமுக பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளது.

பிரதமர் கனவில் தான் இருப்பதாக சொல்லும் இபிஎஸ் என்ன கனவில் உள்ளார்? ஒவ்வொரு ஆண்டும் பயிர் சாகுபடி கொள்முதலில் சாதனை செய்கிறோம். வேளாண் துறை சார்பில் கண்காட்சி, திருவிழா ஆகியவற்றை செய்து மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கிறோம். மண்ணும் செழிக்கிறது மக்களும் செழிக்கிறார்கள். இதுதான் திராவிட ஆட்சி. உழவர்களுக்கு துரோகம் செய்த மாதிரி குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்து சிறுபான்மை மக்களுக்கு துரோகம் செய்தார் எடப்பாடி பழனிச்சாமி. இன்று திண்டுக்கல்லில் சிறுபான்மை மக்களைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதிமுகவும் பாமகவும் அன்று குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இருந்திருந்தால் அந்த சட்டமே நிறைவேறி இருக்காது. இந்த துரோகத்தை மனதார செய்த கட்சிகள் தான் அதிமுகவும் பாமகவும். இந்த சட்டங்களை ஆதரித்து ஓட்டு போட்ட பாமக பாஜகவுடன் அமைத்து இருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி. ராமதாஸ் நிலையை பார்த்து அவர்கள் கட்சிக்காரர்களே தலை குனிந்து நிற்கிறார்கள். இதற்கு மேல் அவரை நான் விமர்சிக்க விரும்பவில்லை. தேனி தொகுதியில் பாஜக ஆதரவில் டி.டி.வி.தினகரன் நிற்கிறார். இதே தினகரன் என்ன சொல்லியிருந்தார் 'பாஜகவில் சேர்வது தற்கொலைக்கு சமம்;  யாராவது தெரிந்தே கிணற்றில் விழுவாங்களா?' என கேட்டவர். இப்பொழுது என்ன 'தெரிந்தே கிணற்றில் விழ வந்திருக்கிறாரா?' அதுதான் இப்பொழுது தேனிக்காரங்க கேட்க வேண்டிய கேள்வி''என்றார்.