தமிழக பா.ஜ.கசெயற்குழு கூட்டம் இன்று காணொளி வாயிலாக தமிழக பா.ஜ.கதலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.கவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் செயற்குழு கூட்டத்தில்காணொளி மூலமாக கலந்து கொண்ட பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தி.மு.க தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது எனக் கடுமையாகச் சாடியிருந்தார். கூட்டத்தில்தேசியத்திற்கும் தெய்வத்திற்கும் எதிராகச் செயல்படுவதாகதி.மு.கவிற்கு எதிராகதீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கந்த சஷ்டி கவசத்தை கறுப்பர் கூட்டம் இழிவுபடுத்தியதைதி.மு.க.வும், காங்கிரசும் கண்டுகொள்ளவில்லை. இந்து வழிபாட்டின் மீது களங்கம் கற்பித்து தி.மு.க.வும், காங்கிரசும் ஒருசேரச் செயல்பட்டு வருகிறதுஎனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் தி.மு.க.வை தேவையின்றிசீண்டுவது ஏன்?தமிழ்ப் பண்பாட்டிற்கும் இந்திய ஒருமைப்பாட்டிற்கும்ஒரே எதிரி உங்கள் கட்சி பா.ஜ.க.தான் என தி.மு.கதலைவர் விமர்சித்துள்ளார்.
கட்சிக்குஆக்கபூர்வமான ஆலோசனை தருவதை விடுத்து தி.மு.க.வை சீண்டியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஸ்டாலின், தி.மு.க, தேசஉணர்வுகளின் மீதுஆழ்ந்த நம்பிக்கை கொண்டு பாடுபடும் இயக்கம்.மக்களின் மனதில் ஆட்சி செய்யும் ஜனநாயக இயக்கமானதி.மு.ககுரல் கொடுக்கவே செய்யும். பா.ஜ.க ஆட்சியில் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. பன்முகத்தன்மை சிதைக்கப்படுகிறது. ஆள் பிடிக்க முயற்சிக்கும் அரசியல் கட்சிதான் பா.ஜ.க என தி.மு.கதலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.