/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1775.jpg)
பெரியார் பிறந்தநாளான செப். 17ஆம் தேதி இனி சமூகநீதி நாளாக கடைப்பிடிக்கப்படுமென தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதனை தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஆதரித்து வரவேற்றனர். செப்.17 சமூகநீதி நாள் அறிவிப்பை வரவேற்றுப் பேசிய தமிழ்நாடு பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், “கடவுள் நம்பிக்கையுடன் உள்ள பாஜக இந்த அறிவிப்பை வரவேற்கிறது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில்தமிழ்நாடு பாஜக மாநில பொருளாளர் சேகர், செப். 17ஆம் தேதியை சமூகநீதி நாளாக தமிழ்நாடு பாஜக ஏன் வரவேற்றது என விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது,“செப்.17இல் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது ஆட்சிக் காலத்தில், நம் நாட்டில் மக்களின் மதிப்பு உயர்ந்துள்ளது;உலக அரங்கில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது;எஸ்.சி., - எஸ்.டி., மக்கள் உரிமைக்காக, அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது;இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது; பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது;அமைச்சரவையில் பெண்கள், ஆதிதிராவிடர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சமூகநீதி காவலரான மோடியின் பிறந்தநாள் செப்., 17. அதனால்தான் பாஜகவரவேற்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)