“தமிழக அரசு என்பது யாருக்கானது?” - தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி

whose is the taminadu goverment velmurugan questioned

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அவர்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகின்றனர். நேற்று (19.02.2021) தலைமைச் செயலகத்தின் முன்பு போராட முயன்ற அரசு ஊழியர்களை முறையற்ற வழியில் காவல் துறை கையாண்டதும், அவர்களைத் தாக்கி கூட்டத்தைக் களைத்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக் கண்டிக்கும் விதமாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் தெரிவித்திருப்பதாவது, “மண்ணின் மக்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். தமிழக அரசு என்பது யாருக்கானது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி எழுப்புகிறது.

whose is the taminadu goverment velmurugan questioned

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போராட்டத்தின் தொடர்ச்சியாக, சென்னை தலைமைச் செயலகம் முன்பு, திரண்ட ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை ஏற்க தயாராக இல்லாத எடப்பாடி பழனிசாமி அரசு, போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது காவல்துறையை ஏவி விட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி அரசின் அடக்குமுறைக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

whose is the taminadu goverment velmurugan questioned

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அவர்களை அழைத்துக் கூட பேச முன் வராதது, ஒரு நல்ல அரசுக்கு அழகல்ல.போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது தடியடி நடத்தி, காயத்தை ஏற்படுத்திய காவல்துறைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

மண்ணின் மக்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு என்பது யாருக்கானது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.எனவே, போராடும் அரசு ஊழியர்களை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதோடு, அவர்களது நியாயமான கோரிக்கைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்தனர்.

govt employes velmurugan tamilaga vaalvurimai party
இதையும் படியுங்கள்
Subscribe