Advertisment

'யார் இந்த விஜய்? அவலமான பேச்சு'-ஆளூர் ஷாநவாஸ் ஆவேசம்

'Who is this Vijay? Sad talk;-Alur Shahnawaz obsession

சென்னை நந்தம்பாக்கத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த விசிகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா 'தமிழ்நாட்டில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டிய நேரம் இது' என பேசி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Advertisment

அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் பேசுகையில், ''மணிப்பூரில் என்ன நடந்துட்டு இருக்குன்னு எல்லாருக்குமே தெரியும். ஆனா அதைப்பற்றி கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் ஒரு அரசு நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது. சரி அங்க தான் அந்த அரசு அப்படி இருக்கிறது என்றால் இங்கு இருக்கின்ற அரசு எப்படி இருக்கிறது. தமிழ்நாட்டில் வேங்கைவயல் என்ற ஊருல என்ன நடந்தது என எல்லாருக்குமே தெரியும். சமூகநீதிப் பேசுகின்ற அரசு அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியலையே. இவ்வளவு காலங்கள் தாண்டி, இத்தனை வருடங்கள் தாண்டி ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லையே அது தான். இதையெல்லாம் அம்பேத்கர் பார்த்தால் வெட்கப்பட்டு தலை குனிந்து போவார். நடக்கிற பிரச்சனைகளுக்கெல்லாம் நாம் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் நடக்கிற பிரச்சனைகள் ஒன்னா ரெண்டா?

Advertisment

பெண் குழந்தைகளுக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக, மனித உயிர்களுக்கு எதிராக இதையெல்லாம் நாம் பார்க்கிறோம், படிக்கிறோம், மற்றவர்களிடமிருந்து கேட்டு தெரிந்து கொள்கிறோம். இதற்கெல்லாம் நிரந்தரமான தீர்வு என்ன தெரியுமா? ரொம்ப சிம்பிள் தான். நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பாதுகாப்புடன் முறையாக முழுமையாக அளிக்கும், மக்களை உண்மையாகவே நேசிக்கின்ற ஒரு நல்ல அரசு அமைந்து விட்டாலே போதும். இங்கு நடக்கின்ற பிரச்சனைகளுக்கு சம்பிரதாயத்துக்காக டிவீட் போடுவது. சம்பிரதாயத்துக்காக அறிக்கை விடுவதும், சம்பிரதாயத்துக்காக நானும் மக்களோடு மக்களாக இருக்கிறேன் என காட்டிக்கொள்வது. சம்பிரதாயத்துக்காக மழை தண்ணீரில் நின்று கொண்டு போட்டோ எடுப்பது. எனக்கு அதில் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. ஆனா என்ன பண்றது நாமும் சம்பிரதாயத்துக்காக சில நேரம் அதுபோன்று செய்ய வேண்டியது ஆகிவிட்டது. கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்ற எகத்தால முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்கள் உங்களோட சுயநலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களை மைனஸ் ஆக்கி விடுவார்கள். தொல்.திருமாவளவன் புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட வர முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு பிரஷர் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், நான் இப்பொழுது சொல்கிறேன் அவருடைய மனசு முழுக்க முழுக்க இன்று நம்மோடு தான் இருக்கும். நன்றி வணக்கம்'' என்றார்.

vck

இந்நிலையில் விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், நடிகர் விஜய்யின் பேச்சை கடுமையாக கண்டித்துள்ளார். அவர் பேசுகையில், ''பேச்சாலும் எழுத்தாலும் அறிவார்ந்த வெளிப்பாட்டாலும் முதிர்ச்சியாலும் பண்பாக அரசியல் களத்தில் உயர்ந்து நிற்கக் கூடிய ஒரு தலைவரை கூட்டணிகளின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கி கிடப்பவர், முடிவெடுக்கத் தெரியாதவர் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை விஜய் ஏற்படுத்தியிருக்கிறார். இது அபத்தமானது அவலமான பேச்சு. கண்டிக்கத்தக்க பேச்சு. திருமாவளவன் குறித்து கலைஞர் அப்படி சொன்னதில்லை; ஜெயலலிதா அப்படி சொன்னதில்லை; இன்று இருக்கக்கூடிய முதல்வர் அப்படி சொன்னதில்லை. அவர்களுக்கு முரணான கருத்துக்களை நாங்கள் வைத்தபோதும்கூட அவர் கட்சியின் கொள்கை அவர் பேசுகிறார் என்று தான் இப்பொழுது கூட முதல்வர் சொல்வார்.

கலைஞருடன் எத்தனையோ விஷயங்களில் திருமாவளவன் முரண்பட்டிருக்கிறார். ஒருபோதும் அவருடைய ஆளுமையை சிதைத்து அவர் பேசியது கிடையாது. திருமாவளவன் நமது கூட்டணியில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் எங்கிருந்தாலும் அவர் வாழ வேண்டும் நல்ல தலைவர் என ஜெயலலிதா வாழ்த்தி உள்ளார். இதுதான் திருமாவளவன் அவருடன் அரசியல் செய்த தலைவர்களிடமிருந்து பெற்றுள்ள சான்றிதழ். யார் இந்த விஜய் எங்கள் தலைவரை இப்படி கொச்சைப்படுத்துவதற்கு? திமுக கட்டுப்பாட்டில் எங்கள் தலைவர் இருக்கிறார் என்று எப்படி அவர் பேசலாம். எங்களுடைய தலைவர் முடிவெடுக்கக் கூடிய தலைவர், அறிவார்ந்த தலைவர் என்பது உலகத்துக்கே தெரியும். 35 வருடமாக பத்திரிகையாளர்கள் அவரைப் பார்த்து வருகிறார்கள். அவர் எழுதி வைத்து படித்ததுண்டா. நேற்று வந்தஇந்த கூத்தாடி இப்படி பேசலாமா? இதை அனுமதிக்க முடியுமா?'' என ஆவேசமாக பேசியுள்ளார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe