Skip to main content

வேலூர் தேர்தல் ரத்துக்கு காரணம் இவரா?

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

தமிழக அரசியலில் நேற்றிலிருந்து பெரும் பரபரப்பாக பார்க்கப்பட்டது வேலூர் பாராளுமன்ற தேர்தல் ரத்து செய்தி தான் . இந்த தொகுதியில் திமுக சார்பில் திமுக பொருளாளர் மகன் கதிர் ஆனந்தும் , அதிமுக கூட்டணி சார்பாக ஏ.சி.சண்முகமும்  போட்டியிடுகின்றனர் . இருவருமே பொருளாதார ரீதியில் செல்வாக்கு மிக்க வேட்பாளர்களாக பார்க்கப்பட்டார்கள் அதோடுமட்டுமில்லால் தமிழகத்தின் ஸ்டார் தொகுதியாகவும் வேலூர் பாராளுமன்ற தொகுதி பார்க்கப்பட்டது . ஏப்ரல் 1-ம் தேதி துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்திற்கு சொந்தமான தொழில் நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை கவனித்து வரும்  பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்ட சிலருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையிட்டனர். 

 

duraimurugan

 

poonjolai srinivasan




இதில், பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான சிமெண்ட் குடோனில்  பெட்டி பெட்டியாக தொகுதி வாரியாக பிரித்து இருந்த மாதிரி  11 கோடியே 54 லட்சம் ரூபாய் சிக்கியது எனவும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து அதிகாரிகள் கைப்பற்றிய பணத்தை பற்றி கேள்விகள் கேட்கும் போது அதற்க்கு சரியான விளக்கமும், பதிலும் தராததால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வருமானவரித்துறையினர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் நடத்தை அமலுக்குப் பிறகு எடுத்த முதல் நடவடிக்கை; தேர்தல் ஆணையம் அதிரடி!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
The Election Commission is in action taken after implementation of electoral conduct

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன் தினம் (16-03-24) பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும், ஏழு கட்டங்களாக நடைபெறும், இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, வரும் ஜுன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே வேளையில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்தது. இது குறித்த அறிவிப்பில், ‘சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது. மாலை, இரவு நேரங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும்.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 50% வாக்குச் சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணைய வழியில் நேரலை செய்யப்படும். தலைமைச் செயலகம், அரசு அலுவலகங்களில் உள்ள தலைவர்கள் படங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட வேண்டும் என்று தெரிவித்தது. அதே போல், தலைமைத் தேர்தல் ஆணையம் பல விதிமுறைகளை அறிமுகப்படுத்தி தேர்தல் நடத்தைக்கு கீழ் அமலுக்கு கொண்டுவந்தது. 

இந்த நிலையில், தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு, முதன்முறையாக தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதில், மேற்கு வங்க மாநில டி.ஜி.பியாக பொறுப்பு வகித்து வந்த ராஜீவ் குமாரை இடமாற்றம் செய்ய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதே போல், குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநில உள்துறை செயலாளர்களையும் மாற்ற உத்தரவிட்டுள்ளது. 

Next Story

'தேர்தல் ஆணையத்தில் குளறுபடி'- சந்தேகம் எழுப்பிய திருமாவளவன்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
'Confusion in the Election Commission'- Thirumavalavan's suspicions

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தேர்தல் வாக்குப்பதிவு தேதிக்கும் வாக்கு எண்ணிக்கை நடக்கவிருக்கும் தேதிக்கும் 45 நாட்கள் இடைவெளி இருப்பது தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தமுறை தேர்தல் ஆணையத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. தேர்தல் ஆணையர் பதவிவிலகி அதற்கான இடங்கள் காலியாக இருந்ததன் காரணமாக ஒரு வாரம் கால தாமதமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவுகளோடு ஒப்புக்கு சீட்டுகளையும் 100% இணைத்து ஒப்பீடு செய்து முடிவு வெளியிட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.