அமமுக கொள்கைப்பரப்புச் செயலாளர், தேனி மாவட்ட பொறுப்பாளராக இருந்த தங்க தமிழ்செல்வன் நேற்று திமுகவில் இணைந்தார். இதையடுத்து தேனி மாவட்ட பொறுப்பாளர்களாக மகேந்திரன், முத்துசாமி ஆகியோர் செயல்படுவார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படும் வரை இருவரும் பொறுப்பாளர்களாக பணியாற்றுவார்கள் என்றும் கூறியுள்ளார். தேனி மாவட்டம் சின்னமன்னூர் ஒன்றிய கழக செயலாளராக இருந்து வருகிறார் முத்துசாமி. மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார் மகேந்திரன்.