தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவி மற்றும் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்தார். பின்பு தெலுங்கானா மாநில கவர்னராக செப்டம்பர் 08ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அதன் பின்பு தமிழக பாஜக தலைவர் பதவிக்கு யார் வருவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

Advertisment

bjp

பாஜகவின் அடுத்த தலைவர் பதவியில் தமிகத்தில் இருக்கும் சீனியர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுவதாக சொல்லப்படுகிறது. அந்த போட்டியில் கொங்கு மண்டலத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனும், வானதி சீனிவாசனும் உள்ளனர் என்பது குறிப்படத்தக்கது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அடுத்து யார் வருவார் என்று குறித்து பேசிய உயர்மட்டக்குழு தமிழகத்திற்கு பாஜக தலைவர் யார் என அறிவிக்கும் வரையில் தமிழக பாஜகவிற்கு கூட்டுதலைமை தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இடைத்தேர்தல் குறித்து பாஜக நிலைப்பாட்டை இன்று இரவு அல்லது நாளை காலை தெரிவிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.