Advertisment

''நான் யார சந்திச்சேன்... இவங்க யார் என்ன நீக்குவதற்கு''-ஓ.ராஜா பேட்டி!

'' Who did I meet ...''- O. Raja interview!

Advertisment

தென்மாவட்டங்களில் உள்ள தொண்டர்கள் சந்திப்பதற்காக சசிகலா நேற்று காலை சென்னை விமான நிலையம் வந்திருந்தார். அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, ''அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தொண்டர்கள் என்னை சந்திப்பார்கள். பிள்ளைகளைச் சந்திக்க போகிறேன்'' என்றார். இதனைத் தொடர்ந்து திருச்செந்தூரில் சசிகலாவை ஓபிஎஸ்-ன் சகோதரர் ஓ.ராஜா சந்தித்திருந்த நிலையில் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓ.ராஜா நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஓ.ராஜாவோடு சசிகலாவை சந்திக்க சென்ற முருகேசன், வைகை கருப்புஜி, சேதுபதி என்ற மூவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.ராஜா, ''அதிமுகவிற்கு சசிகலாவின் தலைமைதான் தேவைப்படுகிறது.என் விருப்பப்படியே சசிகலாவை சந்தித்தேன். இந்த சந்திப்பு குறித்து ஓபிஎஸ்ஸிடம் தெரிவிக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் தான் காரணம். நான் யார சந்திச்சேன். நான் என்ன எதிர்க்கட்சி தலைவரையா சந்திச்சேன். இவங்க யார் என்ன நீக்குவதற்கு. அம்மா (ஜெயலலிதா), எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து கட்சியில் இருக்கிறேன். எனக்கு பொதுச்செயலாளர் சசிகலாதான். ஒரு கால் மணி நேரம் பழைய விஷயங்கள் பற்றியெல்லாம் பேசினோம். அவங்களும் சந்தோசம் என்றார்கள். இவர்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படமாட்டோம்'' என்றார்.

admk sasikala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe