Advertisment

அரசியலில் தங்களின் கருத்துக்களை சுதந்திரமாகவும் ஆவேசமாகவும் பேசி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கிறார்கள் தமிழக அமைச்சர்கள். அதில் அதிகம் விமர்சிக்கப்படுபவராக இருக்கிறார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி! அதனால் அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பொங்கியிருக்கிறார்கள் மூத்த அமைச்சர்கள். இந்த விவகாரம், அதிமுக மேலிடத்தில் ரணகளத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

eps-mla

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ரஜினிக்கு ஆதரவாக பேசி சர்ச்சையில் சிக்கிய ராஜேந்திர பாலாஜி, திமுகவை தாக்குவதற்காக ஹிந்துக்களை ஆதரித்தும் முஸ்லீம்களை எதிர்த்தும் பேசிய வார்த்தைகள் மூத்த அமைச்சர்கள் ரசிக்கவில்லை. முதல்வர் எடப்பாடியை அவர்கள் சந்தித்து, ‘’ பொதுவெளியில் அமைச்சர்கள் தங்கள் விருப்பம் போல பேசக்கூடாது என நீங்கள் வலியுறுத்தியப் பிறகும், அதனை பொருட்படுத்தாமல் மனம் போன போக்கில் பேசுகிறார்கள். குறிப்பாக, ராஜேந்திரபாலாஜி தங்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டவராக தெரியவில்லை. இது ஆரோக்கியமானதாக எங்களுக்குப் படவில்லை. மதப்பிரச்சனையை உருவாக்குவது போல அவரது பேச்சு இருக்கிறது. தமிழகத்துக்கு யார் முதல்வர் ? நீங்களா ? இலலி அவரா ? உங்கள் சொல்லுக்கு கட்டுப்படாதவரை எதற்கு அமைச்சரவையில் வைத்திருக்க வேண்டும் ? அமைச்சரவையிலிருந்து அவரை நீக்குங்கள் ‘’ ஏகத்துக்கும் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

‘’ இதனால், ராஜேந்திரபாலாஜி மீது அதிர்ப்தியில் இருக்கிறார் எடப்பாடி ! சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் கடுமையாக வெடித்திருக்கிறது ‘’ என்கிறார்கள் அமைச்சர்களோடு தொடர்புடையவர்கள்.