ADVERTISEMENT

சிறந்த மக்களவை உறுப்பினர்கள் யார் ? பட்டியல் வெளியீடு ! 

11:17 AM Apr 13, 2019 | Anonymous (not verified)

இந்தியாவில் 17-வது மக்களவை தேர்தல் நடைப்பெற்று வரும் நிலையில் 16- வது மக்களவையில் அங்கம் வகித்த உறுப்பினர்களின் (Lok sabha Mps Performance Rank lists) செயல்பாடுகள் , உறுப்பினர் தொகுதியின் வளர்ச்சி , வேலை வாய்ப்பு , 2014- 2109 ஆண்டு வரை உறுப்பினர்களின் மக்களவை வருகை , மக்களவையில் விவாதத்தில் பங்கேற்றது உள்ளிட்டவை அடிப்படையாக கொண்டு "இந்தியா டுடே" தொலைக்காட்சி மக்களவை உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வெளியீட்டது. இதில் மக்களவையில் மொத்தம் உள்ள 543 உறுப்பினர்களில் சுமார் 416 பேர் தர வரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக "இந்தியா டுடே" செய்தி நிறுவனம் வெளியீட்டுள்ளது.

ADVERTISEMENT



இதன் படி தமிழக மக்களவை உறுப்பினர்கள் யார் தர வரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பதை பார்க்கலாம்.
1.வட சென்னை (அதிமுக) - T.G. வெங்கடேஷ் பாபு - 8th Rank , A+ Grade.
2.விருதுநகர் (அதிமுக) - T.ராதாகிருஷ்ணன் - 13th Rank , A+Grade.
3.மத்திய சென்னை (அதிமுக) - S.R.விஜயகுமார் - 18th Rank , A+Grade.
4. நாமக்கல் (அதிமுக) - பி.ஆர்.சுந்தரம் - 38th Rank - A+ Grade.
5. கடலூர் (அதிமுக) - A. அருண்மொழிதேவன் - 46th Rank - A+ Grade.
6. கிருஷ்ணகிரி (அதிமுக) - K. அசோக் குமார் - 68th Rank - A Grade.
7. திண்டுக்கல் (அதிமுக) - M.உதயகுமார் - 71th Rank - A Grade.
8. கோயம்புத்தூர் (அதிமுக) - P.நாகராஜன் - 74 th Rank - A Grade.
9. ஆரணி (அதிமுக) - V.ஏழுமலை - 76th Rank - A Grade.
10. தென் சென்னை (அதிமுக) - ஜெ.ஜெயவர்தன் - 78th Rank- A Grade.
11. அரக்கோணம் (அதிமுக) - G.அரி - 79th Rank - A Grade.
12. திருவள்ளூர் (அதிமுக) - P.வேணுகோபால் - 83th Rank - A Grade.
13. திருப்பூர் (அதிமுக) - V.சத்யபாமா - 87th Rank - A Grade.
14. ஶ்ரீ பெரும்பத்தூர் (அதிமுக) - K.N.ராமச்சந்திரன் - 95th Rank - A Grade.
15. பொள்ளாச்சி (அதிமுக) - C.மகேந்திரன் - 111th Rank - B+ Grade.
16. சிவகங்கை (அதிமுக) - P.R. செந்தில்நாதன் - 119th Rank - B+ Grade.
17. நீலகிரி(அதிமுக) - C.கோபால கிருஷ்ணன் - 121th Rank - B+ Grade.
18.வேலூர் (அதிமுக) - பி.செங்குட்டுவன் - 124th Rank - B+ Grade.
19. தஞ்சாவூர் (அதிமுக) - K.பரசுராமன் - 126th Rank - B+ Grade.
20. சிதம்பரம் (அதிமுக) - M.சந்தரகாசி - 140th Rank - B+ Grade.
21. நாகப்பட்டினம் (அதிமுக) - K.கோபால் - 144th Rank - B+ Grade.
22. திருவண்ணாமலை (அதிமுக) - R.வனரோஜா - 153th Rank - B+ Grade.
23. மதுரை (அதிமுக) - R.கோபாலக்கிருஷ்ணன் - 162th Rank - B Grade.
24. காஞ்சிபுரம் (அதிமுக) - K. மரகதம் - 163th Rank - B Grade.
25. திருச்சிராப்பள்ளி (அதிமுக) - P.குமார் - 172th Rank - B Grade.
26. தூத்துக்குடி (அதிமுக) - J. ஜெய்சிங் தியாகராஜ் நட்டர்ஜி - 175th Rank - B Grade.
27. தென்காசி (அதிமுக) - M.வசந்தி - 193 th Rank - B Grade.
28. பெரம்பலூர் (அதிமுக) - R.P. மருத ராஜா - 225th Rank - C+ Grade.
29. தேனி (அதிமுக) - R.பார்த்திபன் - 228th - C+ Grade.
30. மயிலாடுத்துறை (அதிமுக) - R.K. பாரதி மோகன் - 238th - C+ Grade.
31. ஈரோடு (அதிமுக) - S.செல்வகுமார சின்னயன் - 244th Rank - C+ Grade.
32. சேலம் (அதிமுக) - V.பன்னீர் செல்வம் - 247th Rank - C+ Grade.
33. திருநெல்வேலி (அதிமுக) - K.R.P.பிரபாகன் - 248th - C+ Grade.
34. ராமநாதபுரம் (அதிமுக) - A.அன்வர் ராஜா - 284th Rank - C Grade.
35. கள்ளக்குறிச்சி (அதிமுக) - K.காமராஜ் - 347th Rank- D+Grade.
36. விழுப்புரம் (அதிமுக ) - S.ராஜேந்திரன் - 352th Rank - D+Grade.
37. தர்மபுரி (பாமக) - அன்புமணி ராமதாஸ் - 400th Rank - D Grade.

ADVERTISEMENT

அதே போல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சொந்த மாவட்டமான சேலம் மக்களவை உறுப்பினரின் செயல்பாடுகள் மிகவும் பின் தங்கி உள்ளதாக " இந்தியா டுடே " தெரிவித்துள்ளது. இந்த வரிசைகள் பட்டியலில் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் திரு. பொன் .ராதாகிருஷ்ணன் , கரூர் மக்களவை உறுப்பினர் திரு.தம்பிதுரை இடம் பெறவில்லை. ஏனெனில் ஒருவர் மத்திய அமைச்சர் மற்றொருவர் மக்களவை துணை சபாநாயகர் என்பதால் அவர்களை தர வரிசை பட்டியலில் சேர்க்கவில்லை என " இந்தியா டுடே " தெரிவித்துள்ளது.


பி.சந்தோஷ் , சேலம்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT