Skip to main content

சிறந்த மக்களவை உறுப்பினர்கள் யார் ? பட்டியல் வெளியீடு ! 

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

இந்தியாவில் 17-வது மக்களவை தேர்தல் நடைப்பெற்று வரும் நிலையில் 16- வது மக்களவையில் அங்கம் வகித்த உறுப்பினர்களின் (Lok sabha Mps Performance Rank lists) செயல்பாடுகள் , உறுப்பினர் தொகுதியின் வளர்ச்சி , வேலை வாய்ப்பு , 2014- 2109 ஆண்டு வரை உறுப்பினர்களின் மக்களவை வருகை , மக்களவையில் விவாதத்தில் பங்கேற்றது உள்ளிட்டவை அடிப்படையாக கொண்டு "இந்தியா டுடே" தொலைக்காட்சி மக்களவை உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வெளியீட்டது. இதில் மக்களவையில் மொத்தம் உள்ள 543 உறுப்பினர்களில் சுமார் 416 பேர் தர வரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக "இந்தியா டுடே" செய்தி நிறுவனம் வெளியீட்டுள்ளது.

 

loksabha



இதன் படி தமிழக மக்களவை உறுப்பினர்கள் யார் தர வரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பதை பார்க்கலாம்.
1.வட சென்னை (அதிமுக) - T.G. வெங்கடேஷ் பாபு - 8th Rank , A+ Grade.
2.விருதுநகர் (அதிமுக) - T.ராதாகிருஷ்ணன் - 13th Rank , A+Grade.
3.மத்திய சென்னை (அதிமுக) - S.R.விஜயகுமார் - 18th Rank , A+Grade.
4. நாமக்கல் (அதிமுக) - பி.ஆர்.சுந்தரம் - 38th Rank - A+ Grade.
5. கடலூர் (அதிமுக) - A. அருண்மொழிதேவன் - 46th Rank - A+ Grade.
6. கிருஷ்ணகிரி (அதிமுக) - K. அசோக் குமார் - 68th Rank - A Grade.
7. திண்டுக்கல் (அதிமுக) - M.உதயகுமார் - 71th Rank - A Grade.
8. கோயம்புத்தூர் (அதிமுக) - P.நாகராஜன் - 74 th Rank - A Grade.
9. ஆரணி (அதிமுக)  - V.ஏழுமலை - 76th Rank - A Grade.
10. தென் சென்னை (அதிமுக) - ஜெ.ஜெயவர்தன் - 78th Rank- A Grade.
11. அரக்கோணம் (அதிமுக) - G.அரி - 79th Rank - A Grade.
12. திருவள்ளூர் (அதிமுக) - P.வேணுகோபால் - 83th Rank - A Grade.
13. திருப்பூர் (அதிமுக) - V.சத்யபாமா - 87th Rank - A Grade.
14. ஶ்ரீ பெரும்பத்தூர் (அதிமுக) - K.N.ராமச்சந்திரன் - 95th Rank - A Grade.
15. பொள்ளாச்சி (அதிமுக) - C.மகேந்திரன் - 111th Rank - B+ Grade.
16. சிவகங்கை (அதிமுக) - P.R. செந்தில்நாதன் - 119th Rank - B+ Grade.
17. நீலகிரி(அதிமுக) - C.கோபால கிருஷ்ணன் - 121th Rank - B+ Grade.
18.வேலூர் (அதிமுக) - பி.செங்குட்டுவன் - 124th Rank - B+ Grade.
19. தஞ்சாவூர் (அதிமுக) -  K.பரசுராமன் - 126th Rank - B+ Grade.
20. சிதம்பரம் (அதிமுக) - M.சந்தரகாசி - 140th Rank - B+ Grade.
21. நாகப்பட்டினம் (அதிமுக) - K.கோபால் - 144th Rank - B+ Grade.
22. திருவண்ணாமலை (அதிமுக) - R.வனரோஜா - 153th Rank - B+ Grade.
23. மதுரை (அதிமுக)  - R.கோபாலக்கிருஷ்ணன் - 162th Rank - B Grade.
24. காஞ்சிபுரம் (அதிமுக) - K. மரகதம் - 163th Rank - B Grade.
25. திருச்சிராப்பள்ளி (அதிமுக) - P.குமார் - 172th Rank - B Grade.
26. தூத்துக்குடி (அதிமுக) - J. ஜெய்சிங் தியாகராஜ் நட்டர்ஜி - 175th Rank - B Grade.
27. தென்காசி (அதிமுக)  - M.வசந்தி - 193 th Rank - B Grade.
28. பெரம்பலூர் (அதிமுக) - R.P. மருத ராஜா - 225th Rank - C+ Grade.
29. தேனி (அதிமுக) - R.பார்த்திபன் - 228th - C+ Grade.
30. மயிலாடுத்துறை (அதிமுக) - R.K. பாரதி மோகன் - 238th - C+ Grade.
31. ஈரோடு (அதிமுக) - S.செல்வகுமார சின்னயன் - 244th Rank - C+ Grade.
32. சேலம் (அதிமுக) - V.பன்னீர் செல்வம் - 247th Rank - C+ Grade.
33. திருநெல்வேலி (அதிமுக) - K.R.P.பிரபாகன் - 248th - C+ Grade.
34. ராமநாதபுரம் (அதிமுக) - A.அன்வர் ராஜா - 284th Rank - C Grade.
35. கள்ளக்குறிச்சி (அதிமுக) - K.காமராஜ் - 347th Rank- D+Grade.
36. விழுப்புரம் (அதிமுக ) - S.ராஜேந்திரன் - 352th Rank - D+Grade.
37. தர்மபுரி (பாமக) - அன்புமணி ராமதாஸ் - 400th Rank - D Grade.

அதே போல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சொந்த மாவட்டமான சேலம் மக்களவை உறுப்பினரின் செயல்பாடுகள் மிகவும் பின் தங்கி உள்ளதாக " இந்தியா டுடே " தெரிவித்துள்ளது. இந்த வரிசைகள் பட்டியலில் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் திரு. பொன் .ராதாகிருஷ்ணன்  , கரூர் மக்களவை உறுப்பினர் திரு.தம்பிதுரை இடம் பெறவில்லை. ஏனெனில் ஒருவர் மத்திய அமைச்சர் மற்றொருவர் மக்களவை துணை சபாநாயகர் என்பதால் அவர்களை தர வரிசை பட்டியலில் சேர்க்கவில்லை என " இந்தியா டுடே " தெரிவித்துள்ளது.


பி.சந்தோஷ் , சேலம்.

சார்ந்த செய்திகள்

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.

Next Story

“வெறுப்புக்கு எதிராக வாக்களியுங்கள்” - பார்வதி வேண்டுகோள்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
actress parvathy request to voters for election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளுக்கு நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் கர்நாடகாவில் சிவராஜ்குமார், பிரகாஷ் ராஜ், கன்னட நடிகர் யஷ் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர். 

இதனிடையே மலையாள நடிகை பார்வதி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் அவரது ஸ்டோரிசில், “வெறுப்புக்கு எதிராக. வெறுப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள். உங்கள் சக மக்களை ஒடுக்குவதற்கும் துன்புறுத்துவதற்கும் மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள். பொய்கள் மற்றும் கோழைத்தனத்திற்கு எதிராக, 'விகாஸ்' என்று முகமூடி அணிந்தவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.