Advertisment

நாமக்கல் மாவட்ட திமுக நிர்வாகிகள் யார் யார்? 

Who are the DMK officials of Namakkal district?

திமுகவின் 15வது அமைப்பு தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. செப். 28ம் தேதி, தமிழகம் முழுவதும் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் விவரம்;

Advertisment

நாமக்கல் கிழக்கு மாவட்டம்:

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார். அவைத்தலைவராக சி.மணிமாறன், துணைச் செயலாளர்களாக நலங்கிள்ளி, பொன்னுசாமி, ராணி பெரியண்ணன், பொருளாளராக பாலச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாக மாயவன், செல்வம், பவித்திரம் கண்ணன் என்கிற ஜானகிராமன் ஆகியோரும், பொதுக்குழு உறுப்பினர்களாக சுசிதரன், சரவணக்குமார், கண்ணன், பூவராகவன், குணசேகரன், விமலா, காளியப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisment

நாமக்கல் மேற்கு மாவட்டம்:

Who are the DMK officials of Namakkal district?

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்து வந்த கே.எஸ்.மூர்த்தி செயலாளர் பதவியில் இருந்து தூக்கப்பட்டார். இதையடுத்து புதிய செயலாளராக எஸ்.எம்.மதுரா செந்தில் நியமிக்கப்பட்டு உள்ளார். துணைச்செயலாளர்களாக அன்பழகன், மயில்சாமி, சாந்தி ஆகியோரும், பொருளாளராக ராஜாராமும் நியமிக்கப்பட்டு உள்ளனர். தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாக நடேசன், செல்வராஜ், ரங்கசாமி, வெங்கடாசலம் ஆகியோரும், பொதுக்குழு உறுப்பினர்களாக சாமிநாதன், திருநாவுக்கரசு என்கிற பழனியப்பன், சிவக்குமார், வேலுமணி, ரவிச்சந்திரன், இந்திராணி ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒன்றியம், நகரம், பேரூர் கழக நிர்வாகிகள் விவரம் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

namakkal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe