ADVERTISEMENT

வேலூர் மாவட்ட ஒன்றியங்களின் சேர்மன்கள் யார்?, யார் ?

06:00 PM Oct 22, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் தலைவர் மற்றும் துணைத்தலைவரை அக்டோபர் 22ஆம் தேதி (இன்று) நடைபெற்ற மறைமுக தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 14 மாவட்ட கவுன்சிலர் இடங்கள் உள்ளன. இவை அனைத்திலும், திமுகவும், அதன் கூட்டணி கட்சியுமே வெற்றி பெற்றிருக்கிறது. இதன் தலைவர் பதவி பொதுப்பிரிவில் வைக்கப்பட்டிருக்கிறது. திமுகவுக்கு மெஜாரிட்டி இருந்ததால் மறைமுக தேர்தல் நடைபெறவில்லை. தலைவருக்கு மனுத்தாக்கல் செய்த பாபு மாவட்ட சேர்மனாகவும், துணை தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிருஷ்ணவேணிஜலந்தர் தேர்வு செய்யப்பட்டனர்.

அதேபோல் மாவட்டத்திலுள்ள 7 ஒன்றியங்களில் கீழ்க்கண்டவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

காட்பாடி - வேல்முருகன்

வேலூர் - அமுதாஞானசேகரன்

கணியம்பாடி - திவ்யா

பேரணாம்பட்டு - சித்ரா

அதேபோல், அணைக்கட்டு - பாஸ்கரன், கே.வி.குப்பம் - ரவிச்சந்திரன் மற்றும் குடியாத்தம் - சத்தியானந்தம் ஆகியோர் ஒன்றியக்குழு தலைவர்களாக வெற்றி பெற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT