Advertisment

திமுகவுக்கு ஆலோசனை சொல்வது யார்? ப்ராண்டிங் நிபுனர் சுனில் ராஜினாமா பின்னணி!

திமுகவின் தேர்தல் வியூக நிபுனர் சுனில் தனது பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்து விட்டார்.

Advertisment

ஒரு கட்சிக்காக தேர்தல் வியூகம் வகுத்து அந்த கட்சியை வெற்றிபெற வைப்பதற்கு தேசிய அளவில் ப்ராண்டிங் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பல கடந்த 5 ஆண்டுகளாக புற்றீசல் போல கிளைப்பரப்பி வளர்ந்து நிற்கின்றன. தேசிய கட்சிகள் தொடங்கி தொண்டர்களால் வளர்ந்த மாநில கட்சிகள் வரை இத்தகைய கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடியில் சிக்கியுள்ளன.

Advertisment

dmk

தேர்தல் காலங்களில் அத்தகைய நிறுவனங்களிடம் புழங்கும் பணம் மட்டுமே பல ஆயிரம் கோடிகள்.

அப்படி ஒரு ப்ராண்டிங் நிபுனரான சுனிலின் ஓ.எம்.ஜி. குரூப் 2015 முதல் மு.க.ஸ்டாலின் ஒப்புதலுடன் ஆலோசனை வழங்கியது. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தலைமையில் இயங்கியது ஓ.எம்.ஜி. குரூப். இந்த குரூப் தான், திமுகவின் வெற்றிக்கான வியூகங்களை வகுப்பது, மக்களை அணுகுவதில் திமுக தலைவரின் செயல்முறைகள், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள், வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கடைபிடிக்க வேண்டிய நெறிகள் உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கி வந்தது. அதன் முக்கிய இடத்தில் இருந்தவர் சுனில்.

அவர் விலகியது ஏன் என்பது குறித்து திமுக தொடர்பில்விசாரித்தபோது, ‘’கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் 23 இடங்களை மட்டுமே திமுக கைப்பற்றியிருந்தது. எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்திருந்தது திமுக. அப்படிப்பட்ட திமுகவிற்கு 2016 சட்டமன்ற தேர்தலிலும், 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் பிரமாண்டமான வெற்றியை தேடித்தந்தது சுனில் போன்றவர்களின் வியூகங்கள்தான். பாஜக துவங்கி பல்வேறு தேசிய கட்சிகளுக்காக ப்ராண்டிங் செய்த ஐ-பேக் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோரை திமுகவுக்கு கொண்டு வருகிற முடிவில் இருக்கிறது திமுக. ஐ.பேக் நிறுவனத்தில் பிரசாந்த் கிஷோரிடம் பணிப்புரிந்தவர்தான் சுனில். அங்கிருந்து, 2014-ல் வெளியேறிய சுனில் தனியாக பிஸ்னெஸ் நடத்தி வருகிறார். இந்த நிலையில், பிரசாந்த் கிஷோரை கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தியுள்ள திமுக, கிஷோரும் நீங்களும் இணைந்து பணி புரிய வேண்டும் என சுனிலிடம் சொல்லியிருக்கிறது. சுனிலோ, தனது பழைய பாஸுடன் இணைந்து பணி புரிய விரும்பவில்லை. அதனால், ராஜினாமா செய்துவிட்டார்‘’ என்கிறார்கள்.

திமுக போன்ற அடிமட்டத் தொண்டர்களின் அர்ப்பணிப்பால் வளர்ந்த கட்சிகளில் திடீர் குபீர் ஆலோசகர்களின் வருகையும் வெளியேறலும் சர்ச்சைகளையே உருவாக்குகின்றன.

adviser Political
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe