Advertisment

எந்தெந்த துறைக்கு எந்தெந்த அதிகாரிகள்??? - தயாராகும் லிஸ்ட்!

ddd

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஆட்சி மாற்றம் வரும் என்று பல தரப்பும் அழுத்தமாக நம்பும் நிலையில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரும், அடுத்து அமையும் ஆட்சியில் நல்ல போஸ்ட்டிங் அமைய வேண்டும் என்பதற்காக திமுக தரப்பை அணுகி வருகின்றனர்.

Advertisment

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதாவிடமும் சசிகலாவிடமும் மிக நெருக்கமாக இருந்தவர் பா.ஜ.க. சின்னத்தின் மலரின் பெயரைக் கொண்ட காவல்துறை அதிகாரி. இப்போது, தி.மு.க. தலைமையை அணுகியிருக்காராம். சசிகலாவுக்கு நான் நெருக்கம் என்பதால் எடப்பாடி பழனிசாமி என்னை ஓரம்கட்டிவிட்டார். நீங்களாவது என்னைப் புரிஞ்சிக்கங்கன்னு அவர் உருக்கமாகச்சொல்லியிருக்கார்.

Advertisment

மத்தியப் புலனாய்வு அமைப்பான 'ரா'வில் பணியாற்றும் ஒரு அதிகாரியும், அவர் தம்பியும்ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த ஈ.சி.ஆர். பிரமுகருக்கு நண்பர்களாம். அவங்க ரெண்டு பேரும்தான், தி.மு.க. ஆட்சி வந்தால் எந்தெந்தத் துறைக்கு எந்தெந்த அதிகாரிகளை நியமிக்கலாம்னு இப்பவே லிஸ்ட் போடறாங்களாம். இவங்களுக்கு சித்தரஞ்சன் சாலை வீட்டிலும் செல்வாக்காம். இந்த இருவரையும், அதிகாரிகள் பலரும் இப்பவே மொய்க்க ஆரம்பிச்சிட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகி கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

TAMILANDU Secretariat mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe