Advertisment

மத்திய அமைச்சர் முருகன் எங்கே சென்றார்? - உளவுத்துறை அலசல்

Where did Union Minister Murugan go? Intelligence analysis

Advertisment

தமிழகம் வந்திருந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றதை அடுத்து, அமித்ஷா கலந்து கொண்ட எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை மத்திய அமைச்சர் முருகன். குறிப்பாகசென்னையில் நடந்த கட்சி நிர்வாகிகளுடன் அமித்ஷா நடத்திய கலந்துரையாடல் கூட்டத்திலும், வேலூரில் அமித்ஷா கலந்து கொண்ட பொதுக்கூட்டத்திலும் முருகன் கலந்து கொள்ளவில்லை. அண்ணாமலை செய்தசில சூழ்ச்சிகளால் முருகன் தடுக்கப்பட்டார்.

அதேசமயம், முருகன் நினைத்திருந்தால் வேலூர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்க முடியும். ஆனால், அங்கேயும் அவர் போகவில்லை. இந்த நிலையில், சென்னையில் இருந்த முருகன், தனது போலீஸ் பாதுகாப்பு (எஸ்கார்ட்) படையினர் இல்லாமல், தனது நண்பர் ஒருவரின் காரை வரவழைத்து அந்த காரில் ஏறி சென்னையின் சில முக்கிய இடங்களுக்குச் சென்று வந்துள்ளார். மத்திய அமைச்சர் என்றில்லாமல் தனிப்பட்ட நபராகஎங்கே சென்றார் முருகன்? என்பதுதான் உளவுத்துறை வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. மேலும், அவர் எங்கு சென்றார் என விசாரித்து வருகிறது.

முருகன் எங்கே சென்றார்? என்றகேள்வி இப்போது பாஜக மேலிடத்திலும் எழுப்பப்படுவதால் பாஜக வட்டாரங்களில் ஒருவித பரபரப்பு நிலவுகிறது.

Annamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe