Skip to main content

’மோடி தமிழகத்துக்கு வரும்போது திமுக சார்பில் கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும்’ -ஸ்டாலின்

Published on 30/03/2018 | Edited on 30/03/2018

 

  

stalin

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான  மு.க.ஸ்டாலின்  இன்று (30-03-2018) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:
 

ஸ்டாலின்: அண்மையில் ஈரோட்டில் நடந்து முடிந்த திராவிட முன்னேற்றக் கழக மண்டல மாநாட்டுக்கு பாடுபாட்டு, உழைத்து பணியாற்றிய கழக முன்னணியினருக்கு, கழக தோழர்களுக்கு பாராட்டு தெரிவிக்கின்ற தீர்மானமும், நியூட்ரினோ திட்டம் தொடர்பாக தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற தீர்மானமும், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென்ற தீர்மானமும், நேர்மையற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களை ரத்து செய்து, மீண்டும் நடத்திட வேண்டுமென்ற தீர்மானமும், மருத்துவ கல்வி மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமும், காவிரி பிரச்ச்னையில் நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத மத்திய – மாநில அரசுகளை கண்டிக்கின்ற தீர்மானமும், நிறைவாக, காவிரி பிரச்சினையில் கபடநாடகம் நடத்திக் கொண்டிருக்கின்ற மத்திய – மாநில அரசுகளை கண்டித்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை எந்தவகையில் நடத்துவது என வரும் 1 ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஒத்த கருத்துடைய கட்சிகளின் தலைவர்களை ஒருங்கிணைத்து, முடிவெடுத்து, அறிவிக்கும் அதிகாரத்தை செயல் தலைவர் என்றமுறையில் இந்த செயற்குழு அளித்து,  7 வது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, மொத்தம் 7 தீர்மானங்கள் இந்த செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. அதுமட்டுமல்ல, பாரத பிரதமர் மோடி அவர்கள் தமிழகத்துக்கு வருகின்ற நேரத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கறுப்பு கொடி காட்டுவதென்றும் முடிவு செய்திருக்கிறோம்.

 

 
செய்தியாளர்: தமிழக அரசின் சார்பில் வரும் 2 ஆம் தேதியன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டு இருக்கிறதே?
 

ஸ்டாலின்: காலக்கெடு முடிவதற்கு முன்பாக, கடைசி நிமிடம் வரை ஓபிஎஸ், “பொறுங்கள் இன்னும் ஒரு வாரம் இருக்கிறது, பொறுங்கள் இன்னும் 3 நாட்கள் இருக்கிறது, இன்னும் ஒருநாள் இருக்கிறது, அரை நாள் இருக்கிறது, 29 ஆம் தேதிக்குள் நல்ல செய்தி வரும், என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல, சாகும் நேரத்தில் “சங்கரா, சங்கரா” என்று சொல்வது போல, ஒரு நாடகத்தை நடத்தியிருக்கிறார்கள். நேற்றைக்கு அமைச்சரவையை கூட்டியிருக்கிறார்கள். அந்தக் கூட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றதாக செய்திகள் வந்திருக்கின்றன. ஆனால், அமைச்சரவை கூட்டத்தில் என்ன பேசினார்கள், என்ன முடிவெடுத்தார்கள் என்று ஒரு செய்தியாவது வந்திருக்கிறதா என்றால் இல்லை. உண்மையில் என்ன செய்திருக்க வேண்டுமென்றால், மத்திய அரசு இதனை செய்யவில்லை என்று கண்டித்து, தீர்மானம் போடும் தெம்பு, திராணி, நாகரிகம் இல்லை. காரணம் என்னவென்றால், ஊழல் செய்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சி பறிபோய் விடக்கூடாது, மத்திய அரசு அப்படிப்பட்ட நடவடிக்கையை எடுத்து விடும் என்பதால், மண்டியிட்டு இந்த அரசு அடிமைபோல நடந்து கொண்டிருக்கிறது.


 

செய்தியாளர்: மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது என்று தெரிந்தே ஆட்சியாளர்கள் நாடகம் நடத்துகிறார்களே?
 

ஸ்டாலின்: இதையே தான் நாங்கள் ஆரம்பத்திலிருந்து தெரிவித்து வருகிறோம். சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தபோதும் இதை குறிப்பிட்டோம். அனைத்து கட்சி கூட்டத்திலும் தெரிவித்தோம். இதெல்லாம் வெறும் கண் துடைப்புதான். பிரதமர் கண்டிப்பாக சந்திக்க மாட்டார். ஆகவே, இதை நிறைவேற்றப் போவதில்லை, என்று சட்டமன்றத்தில் நாங்கள் தெரிவித்தோம். அதுமட்டுமல்ல, தீர்மானத்தை நிறைவேற்றியபோது, உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் சட்டமன்றத்திலேயே தெரிவித்து இருக்கிறேன். ஆனால், அதற்கான முயற்சியில் இதுவரை அவர்கள் ஈடுபடவில்லை.

 

 
செய்தியாளர்: எல்லா எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்வதெனில் நாங்களும் செய்வோம் என்று காங்கிரஸார் தெரிவித்து இருக்கிறார்களே?

ஸ்டாலின்: இதை நான் முன்பே தெரிவித்தேன். அதிமுக முன்வந்து, 50 எம்.பி.க்கள் ராஜினாமா செய்தால், எங்களுடைய 4 ராஜ்யசபா எம்.பி.க்கள் ராஜினாமா செய்யவும் தயார். அதேபோல, தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருக்கின்ற அதிமுகவின் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய முன்வந்தால், அடுத்த நிமிடமே திமுகவின் 89 சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறோம், என்றும் தெரிவித்தேன். ஆனால், அந்த துணிச்சல் ஆளுங்கட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை.


 

செய்தியாளர்: காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான நீங்கள் பிரதமரை சந்திப்பீர்களா?
 

ஸ்டாலின்: இதற்காக பலமுறை நாங்கள் கடிதம் அனுப்பியும், ஒருமுறை கூட அவர்களிடம் இருந்து பதில் வரவில்லை.

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார்.