முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவர்னரை சந்தித்ததன் பின்னணி... டெல்லிக்கு அனுப்பிய ரிப்போர்ட்... வெளிவந்த தகவல்!

admk

சமீபத்தில் கவர்னரைமுதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்று சந்தித்தது தொடர்பாக விசாரித்தபோது, கரோனா நிவாரணப் பணிகள் பற்றி ஆராய்வதற்கு, தமிழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட மத்திய குழு, இங்கே நிலைமை ஒன்றும் சரியில்லை என்று ரிப்போர்ட் கொடுத்திருக்கின்றனர். அதற்கு ஏற்ப, தமிழகத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தாறுமாறாக உயர்வதைபார்த்து எரிச்சலான மத்திய அரசு, தமிழக கவர்னர் பன்வாரிலாலைதொடர்பு கொண்டு, நிலவரத்தை விசாரிக்கச் சொல்லியிருக்கின்றனர்.

அதனால், கவர்னரிடமிருந்து உடனடியாக அழைப்பு வந்ததால், கடந்த 4-ந் தேதி, தலைமைசெயலாளர் சண்முகத்தோடு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் ராஜ்பவனுக்கு அழைத்துச் சென்றார் எடப்பாடி. கவர்னர் கேட்ட கேள்விகளுக்கு தலைமைசெயலாளர்தான் பதில் சொல்லியிருக்கார். அதில் கவர்னர் திருப்தியடையவே இல்லை என்கின்றனர். எடப்பாடி கிளம்பும்போதுகூட காவல்துறை வரை கரோனா அதிகமாகப் பரவியிருக்கும் நிலையில், ஊரடங்குத் தளர்வு தேவையா என்றும், டாஸ்மாக்கை இப்போது திறப்பது சரிதானா என்றும் கோபத்தோடு கேட்டதாக சொல்கின்றனர்.

admk eps governor politics
இதையும் படியுங்கள்
Subscribe