“What if there is no sugarcane in the Pongal package?” Seaman

Advertisment

பள்ளிக்கூடம் கட்டுவதற்கு பணமில்லை எனக் கூறுகிறீர்கள். ஏர்போர்ட் எதற்கு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பில் கரும்பு இல்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளார்களாம். அந்த வருத்தத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு முழம் கரும்பு இல்லைன்னா என்ன ஆகிடும்.

விவசாயிகளிடம் நான் கேட்பது, ஒரு முழம் கரும்பு கூட இல்லாமல் காலம் முழுவதும் உழைத்து என்ன பெற்றீர்கள். உங்களது ஒரே பண்டிகை பொங்கல் தானே. அதைக் கொண்டாடக் கூட இலவசங்கள் வேண்டுமா?

Advertisment

பரந்தூர் விமான நிலையம் கொண்டு வரமாட்டார்கள். கொண்டு வரவும் நாங்கள் விடமாட்டோம். இருக்கின்றவானூர்தி நிலையங்களில் இருக்கும் வசதிகள்போதவில்லை,விமானத்தை இறக்க இடமில்லை எனச் சொன்னார்களா?கடிதமாவது கொடுத்தார்களா?எதற்கு 5000 ஏக்கர்விளைநிலம்?பள்ளிக்கூடம் கட்ட பணமில்லை. எதற்கு ஏர்போர்ட்?நான் கேட்டேனா? சென்னை விமானநிலையத்தில் வசதி போதவில்லை என யாராவது சொல்லியுள்ளார்களா?” எனப் பேசினார்.