'' This is what I said when Jayakumar asked me '' - CV Shanmugam Description!

Advertisment

கடந்த சட்டமன்றத் தேர்தலில்அதிமுகவின் தோல்விக்குப் பாஜகவுடனான கூட்டணிதான் காரணமென முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்திருந்தது அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, அதற்குப் பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு பாஜகவின் பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் தங்களுடைய தோல்விக்கு அதிமுகதான் காரணம்என்பதை வெளிப்படுத்தும் விதமாக, '''உங்களால்தான்' என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு..." என அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஓ. பன்னீர்செல்வம் நேற்று (07.07.2021) ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ''தேச நலன், தமிழ்நாட்டின் நலன் கருதி அதிமுக - பாஜக கூட்டணி தொடரும். இதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. பாஜக மீதும், மோடி மீதும் முழு நம்பிக்கை வைத்துள்ளோம்'' என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், “பாஜக பற்றி நான் கூறிய கருத்து என் சொந்த கருத்து” என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கமளித்துள்ளார்.இதுகுறித்து அவர் அளித்திருக்கும் விளக்கத்தில் ''பாஜக பற்றி நான் கூறிய கருத்து எனது சொந்தகருத்து. இதற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை. ஜெயக்குமார் என்னிடம் கேட்டபோதும் எனது சொந்த கருத்து என்றே நான் தெரிவித்தேன்'' எனக் கூறியுள்ளார்.