கோவை மருத்துவக் கல்லூரியில் கரோனாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவ பி.ஜி. மாணவர்கள் இருவருக்கு கரோனாதொற்று உறுதியாகியிருக்கிறது. இதனால் கேண்டீன் இழுத்து மூடப்பட்டது. அதற்கு பதிலாக, அந்த கல்லூரி டீன் அசோகனின் பினாமி ஒருவர் நடத்திய கேண்டீனில் மற்றவர்கள்சாப்பிட்டு வந்துள்ளார்கள். அங்கு சாப்பிட்டவர்களுக்கு அண்மையில் திடீரென்று பேதி ஏற்பட, அவர்களுக்கெல்லாம் சிகிச்சை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு வசூல் புகார், ஊழல் முறைகேடு என்று ஏற்கனவே ஏக சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் டீன் அசோகன். அதோடு, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், தூய்மைபணியாளர்கள் என்று எவருக்கும் போதுமான பாதுகாப்பு உபகரணங்களைக் கொடுக்கவில்லை என்ற புகாரும் உள்ளது.
அதனால்தான் அங்கே இரண்டு மருத்துவர்களுக்கும் கரோனாதொற்று ஏற்பட்டுள்ளது. இதைதொடர்ந்து மருத்துக்கல்லூரி மாணவர்கள் 70 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது. அதனால்தான் டீன் அசோகன் மீது அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவருடைய அலட்சியத்தால், கோவை மண்டலம் கரோனா மண்டலமாக ஆகிவிடுமோ என்கிற பயம், மேலிடம் வரை பரவியிருக்கிறதுஎன்கின்றனர்.
மேலும் ஜக்கியின் ஈசா யோக மையத்தில், 119 ஃபாரினர்ஸ் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஆசிரமத்துக்குபோன ஒரு சிறப்பு சொகுசுபேருந்தில் அவர்களில் 5 பேர் சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். அங்கே தயாராக இருந்த தனி விமானத்தில் அந்த 5 பேரும் லண்டனுக்குபத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்கள். மாநில அரசுக்கோ, மாவட்ட நிர்வாகத்துக்கோ தெரியாமல், மத்திய அரசின் உதவியோடுஇந்தக் காரியம் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. விஷயம் கசிந்ததால், மாவட்ட நிர்வாகத்தில் இருந்த அதிகாரிகள் சிலர் அதிரடியாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த 5 ஃபாரினர்சுக்கும் என்ன நேர்ந்தது? ரகசியமாகஅவர்களை எதுற்காக அனுப்பிவைக்க வேண்டும் என்கிறசந்தேககேள்விகளை சமூக ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர்.