Skip to main content

''நீங்கள் எல்லைக்குப் போய் என்ன செய்யப் போறீங்க...'' பாஜக அண்ணாமலை விமர்சனம்!

Published on 05/03/2022 | Edited on 05/03/2022

 

 '' What are you going to do when you go to the border ... '' BJP Annamalai Review!

 

ரஷ்யா உக்ரைன் போர் விவகாரத்தில் அங்குள்ள தமிழ் மாணவர்களை மீட்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிலையில் தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு விமர்சனங்களை வைத்துள்ளார். அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''உங்களுக்கு தெரியாத வேலையைச் செய்யாதீர்கள். எக்ஸ்பர்ட்ஸ் கிட்ட அந்த வேலையை விட்டுவிடுங்கள். அவர்கள் இந்த வேலையைத் தனித்தன்மையாக செய்து மாணவர்களை இங்கு கொண்டுவந்து விடுவார்கள். எதற்கெடுத்தாலும் நான்தான் நான்தான் என சொல்கிறீர்கள். அப்படி என்ன அரசியல். தமிழ்நாட்டில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது. குழந்தைகளுடைய பெற்றோரைப் பார்க்க முடியவில்லை. உக்ரைனில் கடந்த எட்டு நாட்களாக இந்த போரை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். உலகத்தில் இருக்கக்கூடிய எந்த நாடும் உள்ளே சென்று குழந்தைச் செல்வங்களை மீட்க முடியாத நிலைமை இருக்கிறது.  சிறிய நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் என யாராலும் முடியவில்லை. அமெரிக்கா போன்ற நாடுகள் அவர்களுடைய பிரஜைகளை  அங்கிருந்து மீட்க முடியவில்லை.

 

நேற்றுவரை 6,200 குழந்தைகள் இந்தியாவிற்கு வந்துள்ளார்கள். இன்றும் நாளையும் சேர்த்து 7,400 பேர் வரப்போகிறார்கள். ஆக மொத்தம் 14 ஆயிரம் குழந்தைகள் இதுவரை, இன்று நாளைக்குள் கங்கா ஆபரேஷன்கள் மூலம் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் வரப்போகிறார்கள். இந்த நேரத்தில் தமிழக அரசு 3 எம்பிக்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்புகிறோம் என்று சொல்கிறார்கள். அவர்கள் அங்கே போய் என்ன செய்யப் போகிறார்கள். மத்திய அரசு பணியை எப்படி இவர்களால் செய்ய முடியும். ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட சுற்றியுள்ள ஐந்து நாடுகளிடமும் மத்திய அரசு பேசி நமக்காக விமானங்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது மாநில அரசு அங்குச் சென்று என்ன செய்யும் என்பது என்னுடைய கேள்வி. இது அவர்களுடைய பணியே கிடையாது. பெற்றோர்களைச் சந்தித்துப் பேச வேண்டிய பணிகள் இருக்கும் போது இதை செய்வது முழுமையான அரசியல் ஆதாயத்திற்கு மட்டும்தான். மத்திய அரசின் பணியை உலக அளவில் இந்திய அளவிலும் தமிழகத்திலும் அனைத்து மக்களும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாளைக்கு அமெரிக்காவில் தமிழர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் இங்கிருந்து குழுவை அனுப்புவீர்களா? நாளைக்கு பிலிப்பைன்சில் புயலில் ஒரு தமிழனுக்கு பிரச்சினை ஏற்பட்டால் இங்கிருந்து குழுவை அனுப்புவீர்களா? ஜப்பானில் ஒரு தமிழனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் குழுவை அனுப்புவீர்களா? இதற்குத்தான் அரசியலமைப்புச் சட்டத்தில் யார் எந்த வேலையும் செய்ய வேண்டும் என்று மிகத் தெளிவாக இருக்கிறது.

 

இதெல்லாம் தெரியாமல் ஏன் தமிழக முதல்வர் இந்திய அளவில் நகைச்சுவைக்கு ஆளாகும் மனிதராக மாறி கொண்டிருக்கிறார். தொடர்ச்சியாக, இது முதல் முறை கிடையாது இது நான்காவது ஐந்தாவது முறை இந்த மாதத்தில் மட்டும். உங்களுக்குத் தெரியாத வேலையைச் செய்யாதீர்கள்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.