சமீபத்தில் ரஜினி பேசும் போது, பாஜக சாயம் என் மேல் பூச முயற்சி நடைபெறுகிறது. திருவள்ளுவர் போல என் மீதும் அந்த முயற்சி நடந்து வருகிறது. திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தன்கார், கொல்கத்தாவிலுள்ள ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் வருகை குறித்துக் கேள்வி கேட்டனர்.
அதற்கு பதிலளித்த மேற்கு வங்க கவர்னர், ரஜினியின் லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவருக்கு மக்கள் செலவாக்கு உள்ளது. அவரது சமீபத்திய படங்கள் வரை அனைத்தையும் பார்த்து இருக்கிறேன். ஆனால்,அரசியலில் அவர் எப்படி செயல்படுவார் என்பது குறித்து என்னால் கணிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.