Advertisment

'பங்காளி சண்டையெல்லாம் அப்புறம்; எங்கள் கூட்டணியில் எடப்பாடி'-டி.டி.வி.தினகரன் பரபரப்பு 

'We're in a mess in our alliance; we can look into the partner fights later' - T.T.V. Dinakaran stirs up controversy

Advertisment

அண்மையில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைத்திருந்த நிலையில் வரும் எட்டாம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும்தமிழகம் வர உள்ளது அரசியல் வட்டாரத்தைபரபரப்பாக்கியுள்ளது. இதனால் பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக பாமக ராமதாஸிடம் இது குறித்து குருமூர்த்தி மூலம் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் மதுரையில் அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கும் பேட்டியளித்து பேசுகையில், ''தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜெயலலிதாவின் கட்சி (அதிமுக) தலைமை ஏற்கும் என சொல்லியிருந்தார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஜெயலலிதாவின் கட்சி தான் தலைமை ஏற்கும். வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் எங்களது கூட்டணி தான் திமுக என்கிற தீயசக்தி கூட்டணிக்கு மாற்றுச் சக்தியாக உறுதியாக இருக்க முடியும். அதில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியாய் இணைய வேண்டும் என்று நினைத்தோம். அதில் ஜெயலலிதாவின் கட்சியேஒன்று சேர்ந்துள்ளது.

'We're in a mess in our alliance; we can look into the partner fights later' - T.T.V. Dinakaran stirs up controversy

Advertisment

அதிமுகவிற்கும் எங்களுக்கும் ஏற்கனவே பங்காளி சண்டை இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை இந்த சண்டையையெல்லாம் ஓரம் கட்டி விட்டு திமுகவை வீழ்த்திவிட்டு அந்த சண்டையைபார்த்துக் கொள்ளலாம் என்ற குறிக்கோளோடு தேசிய ஜனநாயக கூட்டணியில் செயல்பட்டிருக்கிறோம். எங்கள் அணிக்கு தான் எடப்பாடி வந்து சேர்ந்திருக்கிறார். நாங்கள் ஏற்கனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறோம். பாமகவில் அப்பா பையன் இடையே பிரச்சனை நடக்கிறது. அவை முடிந்து பாமக பழைய பலத்தோடு எங்கள் கூட்டணிக்கு வரும். தேமுதிகவும் கூட்டணிக்கு வரும்'' என்றார்.

admk ammk edappadi pazhaniswamy
இதையும் படியுங்கள்
Subscribe