ஆர்.கே.நகரைப் போல் திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெறுவோம் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்,
திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம். ஆர்.கே.நகரைப் போல் திருப்பரங்குன்றம் மாபெரும் வெற்றியை தரும். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும் என்றார்.