actress sripriya

Advertisment

மக்கள் நீதி மய்யம் கடலூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக விழா கடலூர் டவுன்ஹாலில் கடந்த திங்கள்கிழமை நடந்தது.

கூட்டத்தில் பேசிய நடிகையும், மாநில செயற்குழு உறுப்பினருமான ஸ்ரீபிரியா,

நடிகர்களுக்கு என்ன தெரியும் என்கிறார்கள். கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரும் நடிகர்களாக இருந்து தான் ஆட்சிக்கு வந்தார்கள். ஆகவே நடிகர்கள் அரசியலுக்கு வருவது தவறில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்காக தான் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

மாதம் 1 ரூபாய் சம்பளம் என்று நாட்டை கொள்ளையடிக்க மாட்டோம். உண்மையான அரசியல்வாதியாக கமல்ஹாசன் இருப்பார். தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவில் உள்ள மக்களுக்கு மறதி அதிகம் உள்ளது. கொள்ளையடித்தவரை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற செய்து இருக்கிறார்கள்.

பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் அரசியல் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் சிந்தித்து செயல்பட முடியும். மாற்றம் தேவை, அது யார்? என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.