Advertisment

’எங்களோடு வரும் கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்திப்போம்’- ஓபிஎஸ் 

o

அதிமுக செயற்குழு கூட்டம் இன்று இரவு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அவைத்தலைவர் மதுசூதணன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisment

இக்கூட்டம் முடிந்து வெளியே வந்த ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’1.22 கோடி உறுப்பினர்களை கொண்ட இயக்கம் அதிமுக. ஜெயலலிதாவினால் வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுகவை பாதுகாக்க வேண்டும் என செயற்குழுவில் பேசினேன். நேரம் வரும்போது அதிமுக வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும்.

Advertisment

தேர்தல் வியூகம் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும் உருவாகி உள்ளது. எங்களோடு வரும் கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்திப்போம். இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும். எங்களோடு வரும் கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்திப்போம் ’’என்று தெரிவித்தார்.

ops
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe