Advertisment

“அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஓரிரு நாளில் தகவல்” - ரங்கசாமி பேட்டி!

th

Advertisment

புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் பெரும்பான்மை இழந்ததையடுத்து, முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சரவை ராஜினாமா செய்தது.

இதனிடையே எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் நாராயணசாமி சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,“புதுச்சேரி மாநிலத்திற்காக காங்கிரஸ் அரசு புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. மத்திய அரசையும், துணைநிலை ஆளுநரையும் குறை சொல்லிக்கொண்டு இருந்ததை தவிர வேறு எதையும் உருப்படியாகச் செய்யவில்லை. மத்திய பா.ஜ.க அரசை விமர்சித்து பொதுக்கூட்டத்தில் விமர்சித்துப் பேசுவதுபோல் சட்டமன்றத்தில் பேசியுள்ளார் முதலமைச்சர்.

காங்கிரஸ் அரசால் மக்களுக்கான எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியவில்லை என்பதுஅவர்களது கட்சி உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளதிலிருந்தே தெரிகிறது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஓரிரு நாளில் தெரிவிப்போம்" என்றார். இந்தப் பேட்டியின்போதுபாஜக மாநிலத் தலைவர் சுவாமிநாதன்,அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவர் அன்பழகன் மற்றும் எம்.எல்.ஏக்கள் உடனிருந்தனர்.

Advertisment

இதனிடையே ரங்கசாமியுடன் பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆலோசனை மேற்கொண்டார். காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது. அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக இருகட்சிகளும் சேர்ந்து முடிவெடுக்கும் என நம்பப்படுகிறது. அதேசமயம் எந்த முடிவையும் வெளிப்படையாக இரு தரப்பும் அறிவிக்காததால் புதுச்சேரி அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது.

nr congress Pondicherry
இதையும் படியுங்கள்
Subscribe