Advertisment

'விஜயகாந்த் எடுக்கும் முடிவை ஏற்போம்...' - மா.செக்கள் ஒருமித்த குரல்!  

'We will accept the decision taken by Vijayakanth ...' says district secretaries

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், திமுக கூட்டணியில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Advertisment

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு முடிந்துள்ளது. தேமுதிகவுடன் 5 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இதுவரை இரண்டு கட்சிகளும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில் தேமுதிகவுக்கு 13 தொகுதிகள் வரை கொடுக்க அதிமுக சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், இதுதொடர்பாக இறுதிமுடிவு எடுக்கப்படும் என்றும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

'We will accept the decision taken by Vijayakanth ...' says district secretaries

இந்நிலையில்,சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று (09.03.2021) காலை 11மணிக்கு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுககொடுக்க இருக்கும் குறைந்த தொகுதிகளைஏற்பதா? அல்லதுதனித்து நிற்பதா?என இந்த மாவட்டச் செயலாளர்கள் உடனானஅவசர ஆலோசனைக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட நிலையில், அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் கட்டுப்படுவோம், அவரது முடிவைஏற்போம் என ஒருமித்தக் கருத்தை மாவட்டச் செயலாளர்கள் வெளியப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேமுதிகவை பொறுத்தவரை இது மிகவும் முக்கியமான தேர்தல். கட்சி சின்னத்தை தக்கவைக்க வேண்டுமெனில் குறைந்தது 6 தொகுதிகளில் தேமுதிக வெற்றிபெற வேண்டும் என்ற நிலை உள்ளதால், தற்போதுஅதிமுக கொடுக்கும் இடங்களை ஏற்பதா? அல்லது தனித்து போட்டியா? என்பதைமுடிவெடுக்கும் சூழலில் தேமுதிக உள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

admk tn assembly election 2021 vijayakanth dmdk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe