தேர்தல் பணியில் ஏற்கனவே ஆயத்தமாகிவிட்டோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன்,
திருப்பரங்குன்றம், திருவாரூரில் தேர்தல் பணியில் ஏற்கனவே ஆயத்தமாகிவிட்டோம். இரண்டு தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறுவோம். தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களின் நலனைவிட, எடப்பாடியுடன் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை கவனித்து கொண்டு இருக்கிறார்கள். 18 எம்எல்ஏக்கள் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பில் நிச்சயம் எங்களுக்கு நியாயம் கிடைக்கும். தீர்ப்பு வந்த பிறகு இந்த ஆட்சி முடிவுக்கு வரும்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
தமிழகத்தில் ஆட்சி என்பது நடக்கவில்லை. என்றைக்கு வேண்டுமானாலும் இந்த ஆட்சி வீட்டுக்கு போகும் அதுவரை மக்களை மகிழ்விப்பதற்காக இந்த ஆட்சியாளர்கள் அப்படி பேசுவார்கள். இவர்கள் பேசி எது உண்மையாக இருக்கிறது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தலோடு நடக்கும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.