Advertisment

‘இபிஎஸ் அறிவித்த பின் தான் நாம் அறிவிக்க வேண்டும்’ - ஓபிஎஸ் இடம் கோரிக்கை வைக்கும் நிர்வாகிகள்

 'We should announce only after EPS announces'-Administrators demand OPS

Advertisment

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகஇருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது.

காங்கிரசின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரைக்களமிறக்கத்தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது வேட்பாளரை அறிவித்த பிறகு தங்களது தரப்பு வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளதாகத்தகவல்வெளியாகி உள்ளது. சென்னையில் நடந்து வரும் ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், ‘இபிஎஸ் வேட்பாளரை அறிவித்த பின் நாம் நம்முடைய வேட்பாளரை அறிவிக்கலாம்’எனக் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

admk ops_eps
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe