“நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வர இறைவனை வேண்டுகிறோம்” - தமிழ்மகன் உசேன்

publive-image

நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரும் என்று இறைவனை வேண்டுகிறோம். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராகவேண்டும் என அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கூறியுள்ளார்.

இரு மாதங்களுக்கு முன்பு அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் மற்றும் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக ஈபிஎஸ் ஆக வேண்டும் என்பதற்காகஆன்மீகப் பயணத்தைஅதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் துவங்கினார்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்மகன் உசேன், “எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளராக வேண்டும் என்பதற்காகவும், அவர் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்பதற்காகவும் ஆன்மீகப் பயணம் என்ற சிறப்புத் துவா நிகழ்ச்சியினை நான் இரண்டு மாதங்களுக்கு முன்னால் துவங்கினேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரும் என்று இறைவனை வேண்டுகிறோம். மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என்பதற்காக இறைவனை வேண்டுகிறோம்.

ஒன்றிணைந்து தான் இருக்கிறோம். இந்த இயக்கத்தை அசைக்க யாராலும் முடியாது. நான் 43 மாவட்டங்களில் பார்க்கிறேன். மிக எழுச்சியாக இருக்கிறது. அதிமுகவில் எந்த பாகுபாடும் கிடையாது. அதிமுக தொண்டர்களை நம்பியுள்ள இயக்கம். மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி வருவார்” எனக் கூறினார்.

admk
இதையும் படியுங்கள்
Subscribe