Advertisment

''மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்''-ராகுல் காந்தி கருத்து!

'' We humbly accept the judgment of the people '' - Rahul Gandhi comment!

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் பல கட்டங்களாகச்சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தநிலையில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisment

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. உத்தரகாண்ட், மணிப்பூர், கோவாவில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் போட்டி கண்ட அனைத்து மாநிலங்களிலும் பின்னடைவின் முகமாகவே உள்ளது. கோவாவில் மட்டும் பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி இருந்தாலும் தற்பொழுது 19 இடங்களில் அங்கு பாஜக முன்னனியில் உள்ளது. காங்கிரஸ் 12 இடங்களில் உள்ளது. ஐந்து மாநிலத்தில் மொத்தமாக உள்ள 690 தொகுதிகளில் வெறும் 68 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. அதே நேரத்தில் பாஜக பஞ்சாப்பை தவிர மற்ற நான்கு மாநிலங்களிலும் முன்னணியில் உள்ளது.பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த நிலையில் பஞ்சாப்பை கைவிட்டு மீதம்ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகியஇரண்டு மாநிலங்களிலேயே காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. இது காங்கிரசுக்கு சற்று பின்னடைவாகவேஅரசியல் நோக்கர்களால்பார்க்கப்படுகிறது.

Advertisment

போட்டியிட்ட மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் தோல்வி முகம் கண்டுள்ள நிலையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்திதேர்தல் முடிவுகள் குறித்து தெரிவித்துள்ளதாவது, ''மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்குவாழ்த்துக்கள். தேர்தல் முடிவுகளில்இருந்து பாடம் கற்பதுடன் இந்திய மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம். காங்கிரஸ் தொண்டர்களின் கடின உழைப்புக்கும், அர்பணிப்புக்கும்நன்றி'' என தெரிவித்துள்ளார்.

congress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe