Advertisment

''நாங்கள் தேர்ந்தெடுத்த பொதுச்செயலாளர் தயார்''-செல்லூர்ராஜூ பேட்டி!  

'' We have elected General Secretary ready '' - sellurraju interview!

Advertisment

அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் இன்று சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற இருக்கின்ற நிலையில் கூட்டத்தில் பங்கேற்க தனது இல்லத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்டுள்ளார். இன்று அதிகாலை முதலே அதிமுக தொண்டர்கள் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தனியார் மண்டபத்தை நோக்கி படையெடுத்து வரும் நிலையில், தற்போது எடப்பாடி பழனிச்சாமி சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது வீட்டிலிருந்து வானகரம் புறப்பட்டுள்ளார். அதேபோல் கோமாதா பூஜைக்கு பிறகு ஓபிஎஸ் வானகரம் புறப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ''இந்த வழக்கு சட்ட வல்லுநர்கள் கையில்தான் இருக்கிறது. இப்பொழுது நாங்கள் பொதுக்குழுவிற்கு புறப்பட்டு கொண்டிருக்கிறோம். நாங்கள் தேர்ந்தெடுத்த பொதுச்செயலாளர் பொதுக்குழுவுக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கிறார். நாங்கள் முன்னாடி போய்க் கொண்டிருக்கிறோம். ஒற்றைத் தலைமை குறித்து நிச்சயமாக முடிவெடுக்கப்படும். வல்லுநர்களின் கருத்தை அறிந்து அதனை செய்வார்கள்'' என்றார்.

admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe