Skip to main content

‘சட்ட ஒழுங்கு சீர்குலைவு பற்றி ஆளுநர் கவனத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறோம்’ - எடப்பாடி பழனிசாமி 

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

‘We have brought to the attention of the Governor the disturbance of law and order’ - Edappadi Palanisamy

 

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதனைக் குறித்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இந்த 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக முறைகேட்டில் ஈடுபட்டு ஜனநாயகப் படுகொலை செய்து, வெற்றி பெற்றவர்களை தோல்வியுற்றவர்களாக அறிவித்துள்ளார்கள். தேர்தல் ஆணையம் கைப்பாவையாக செயல்பட்டு அரசு சொல்வதை அப்படியே நிறைவேற்றியுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர்களும், முறையாகத் தேர்தல் பணியைக் கவனிக்கவில்லை. ஒன்பது மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆட்சியரை சந்தித்து புகார் கொடுக்க சென்றபோது, அவர்களை சந்திக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. உதாரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அதனை அறிவிக்க காலதாமதம் ஆனது. அது தொடர்பாக அவர் புகார் தெரிவிக்கச் சென்றபோது அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கிட்டத்தட்ட 6 மணி நேரம் கழித்தே அவரது வெற்றியை அறிவித்தார்கள். அதே திமுகவினரின் வெற்றியை உடனுக்குடன் அறிவித்தார்கள். 

 

பல்வேறு இடங்களில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அதிமுகவினரை தோல்வியுற்றவர்களாக அறிவித்திருக்கிறார்கள். எனவே இதுபோன்று எங்கெல்லாம் முறைகேடுகள் நடந்துள்ளதோ அவற்றை எல்லாம் புகார் மனுவாக ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளோம். மேலும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளோம். 

 

‘We have brought to the attention of the Governor the disturbance of law and order’ - Edappadi Palanisamy

 

இப்படி தேர்தல் நடக்கும் என்று தெரிந்துதான் முதலில் தேர்தல் ஆணையத்தை நாடினோம். ஆனால், தேர்தல் ஆணையம் எங்கள் கருத்தைக் காதில் வாங்கிக்கொள்ளாத காரணத்தினால், நீதிமன்றத்தை நாடினோம். அதனை ஏற்று நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவை தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை. இந்த அரசும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. திருப்பத்துர் மாவட்டம், ஆலங்காயம் எனும் ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினரே வாக்குப் பெட்டிகள் வைத்திருக்கும் மையத்திற்குச் சென்று வாக்குப் பெட்டிகளை எடுத்துவரும் காட்சி அனைவரும் பார்த்ததே. ஆனால், அங்கு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த சட்டமன்ற உறுப்பினர் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை. 

 

சட்ட ஒழுங்கு சீர் குலைவு பற்றியும் ஆளுநர் கவனத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறோம். சசிகலா அதிமுகவில் இல்லை. கட்சியில் இல்லாத அவரை பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும். தேர்தல் ஆணையமே உண்மையான அதிமுக என்று எங்களைத்தான் சொல்லியுள்ளது” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதிமாறன் அவதூறு வழக்கு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” எனப் பேசி இருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 14 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. 

Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தயாநிதிமாறன், “என் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர கால அவகாசம் வழங்கி இருந்தேன். இருப்பினும் அவர் மன்னிப்பு கோரவில்லை. ஆகையால் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். இதுவரை 95 சதவீத நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தியுள்ளேன்”எனத் தெரிவித்தார். 

- படங்கள் : எஸ்.பி. சுந்தர்