Advertisment

“தேர்தல் சின்னம் கோரி விண்ணப்பித்துள்ளோம்” - ஓ.பி.எஸ்.!

“We have applied for an election symbol” - O.P.S.

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

அந்த வகையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியில் தமிழகத்தின்முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூட்டணி அமைத்துள்ளார். சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஓ. பன்னீர் செல்வம் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பா.ஜ.க. நிர்வாகி மற்றும் தனது ஆதரவாளர்களுடன் வந்த ஓ. பன்னீர்செல்வம் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைத் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “மக்களவைத் தேர்தலில் பக்கெட் வாளி, பலாப்பழம் சின்னம், திராட்சைப் பழம் சின்னத்தில் ஒன்றை ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளோம். என்னுடைய பலத்தை நிரூபிப்பதற்கு மட்டும் தேர்தலில் போட்டியிடவில்லை. அ.தி.மு.க.வின் எம்.ஜி.ஆர் வகுத்து தந்த சட்டவிதியின் படி தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அ.தி.மு.க.வை 50 ஆண்டுகளாக வழிநடத்தினார்கள். அவர்கள் கடந்து வந்த பாதையில் நாம் நடக்க வேண்டும் என்பது தான் என்னுடைய தலையாய குறிக்கோள். இதில் இருந்து மாறுபடக் கூடது என்பதுதான் என்னுடைய குறிக்கோள். அதன்படி தான் நடக்க வேண்டும் என்பது தான் ஒன்றறை கோடி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் நிலைப்பாடும், எண்ணமும் ஆகும்” எனத் தெரிவித்தார்.

Symbol Ramanathapuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe