Advertisment

“பாஜக கூட்டணி வேண்டாம்; சுமை என்றெல்லாம் சொன்னார்கள்”- அண்ணாமலை

“We don't want a BJP alliance; They said it was a burden” - Annamalai

“பாஜக கூட்டணி வேண்டாம்; பாஜக சுமை என்றெல்லாம் சொன்னார்கள்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisment

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாஜக தொண்டர்களது கட்சி. மற்ற கட்சிகளைப் போல் தலைவர் 50 வருடங்கள் இருக்க முடியாது. பாஜகவை பொறுத்தவரை கூட்டணி குறித்து தலைமை தான் முடிவு செய்யும். பாஜக தலைமை தொண்டர்களுக்கு மதிப்பு கொடுத்துமரியாதை கொடுத்து அவர்களிடம் கேட்டு முடிவெடுப்பார்கள். அவர்கள் சொல்வதற்கு அனைத்து தொண்டர்களும் கட்டுப்படுவார்கள். அத்தலைவர்கள் எடுக்கும் முடிவு இக்கட்சியை வலுப்படுத்துவதில் தான் இருக்கும்.

Advertisment

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி வேண்டாம் என நிறைய பேர் சொன்னார்கள். பாஜக சுமை என்று சொன்னார்கள். இதையெல்லாம் நான்கைந்து வருடங்களாகப் பார்த்துக்கொண்டுதான் உள்ளோம். பாஜக வலிமைப்பட வேண்டும் என நான் தெளிவாக உள்ளேன். இதில் கூட்டணி வேண்டாம், கூட்டணி வேண்டும் என்பது என் நிலைப்பாடு இல்லை. எந்த முடிவாக இருந்தாலும் பாஜகவின் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்.

பாஜக தற்போது தமிழகத்தில் வளர்ந்துள்ளது. எங்களுக்கென்று வாக்கு வங்கி தமிழ்நாட்டில் உள்ளது. இதில் மாற்றுக்கருத்துஇல்லை. மக்கள் அதிகமானோர் தேசியத்தின் பக்கம் வந்துள்ளார்கள். காரணம் காங்கிரஸ் அழிந்துகொண்டுள்ளது. தேசிய கட்சியாக பாஜக மட்டும் தான் உள்ளது” எனக் கூறினார்.

Annamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe