Skip to main content

எது தடுக்கிறது என்பதை முதல்வர்தான் தெரிவிக்க வேண்டும்... ஜான்பாண்டியன் பேட்டி

Published on 08/09/2020 | Edited on 08/09/2020

 

We are fighting from the AIADMK alliance; It is up to the chief to inform what is preventing; Johnpondian

 

 

அ.தி.மு.க கூட்டணியில்தான் தற்போது இருக்கிறோம், அங்கிருந்தபடியேதான் போராடி வருகிறோம், ‘தேவந்திரகுல வேளாளர் என அரசாணை வெளயிட வேண்டும்’ என்கிற   கோரிக்கையை எது தடுக்கிறது என்பதை முதல்வர்தான் தெரிவிக்க வேண்டும் என்கிறார் ஜான்பாண்டியன். 

 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் பட்டியல் இனத்திலிருந்து விலக்கி தேவந்திரகுல வேளாளர் என அரசாணை வெளயிட வேண்டும் என ஆர்பாட்டம் நடைபெற்றது. 

 

போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன், "அரசு தேர்தல் வாக்குறுதி கொடுத்தது பொய்த்துபோகமல் வருகின்ற தேர்தலுக்குள் தேவேந்திர குல வேளாளர் என அரசாணை கொடுப்பார்கள் என்று நம்புகின்றோம். பிரதமரை சந்தித்தபோது எஸ்.சி. பட்டியலிருந்து எங்களை விலக்கி வேளாண் மரபினராக அறிவிக்க வேண்டும், அல்லது மக்கள் தொகை ஜனத்தொகையின் அடிப்படையில் எங்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினேன். பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் பாராளுமன்றம் கூடும்போது அங்கு சென்று அமைச்சர்களை சந்தித்தும்,  இன்னும் சில நாட்களில் தமிழக முதல்வரை சந்தித்தும் இதுகுறித்து வலியுறுத்துவோம். எங்களது கோரிக்கை நிச்சயம் நிறைவேறும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

 


அ.தி.மு.க கூட்டணியிலிருந்துதான் தற்போது போராடி வருகிறோம், எங்களின் கோரிக்கையை எது தடுக்கிறது என்பதை முதல்வர்தான் தெரிவிக்க வேண்டும். எங்களது கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்." என தெரிவிததார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க. - த.ம.மு.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
BJP  TMMK. Alliance agreement signed between

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (20.03.2024) தொடங்கி இருக்கும் நிலையில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதே சமயம் பா.ஜ.க. தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க.விற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டி.டி.வி. தினகரன் வரும் 24 ஆம் தேதி தேனியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார்.

இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் கையெழுத்திட்டார். அதில், “2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“இதை மத்திய அரசு கொடுத்தது; இபிஎஸ் ஓபிஎஸ் கொடுக்கவில்லை” - ஜான் பாண்டியன்

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

John Pandian addressed the public meeting

 

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில் பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஜான் பாண்டியன் கலந்துகொண்டார்.

 

கூட்டத்தில் பேசிய அவர், “முதல்வராக இபிஎஸ் இருந்தபோது அவரிடம் 100 முறை நடந்திருப்பேன். தேவேந்திர குல வேளாளர் என்ற அரசாணைக்காக அவர்களிடம் சென்றேன். இங்கு சட்டமாக உருவாக்கி மத்திய அரசுக்கு அனுப்புங்கள் எனச் சொன்னேன். இவர்கள் கொடுக்கவில்லை. ஆட்சியில் இருந்த பழனிசாமியிடம் இருந்து உடனடியாக தேவேந்திர குல வேளாளர் கோப்புகளை அனுப்பு என்கிற கட்டளையின் அடிப்படையில் அனுப்பினார்கள்.

 

இவர்களாக முன்வந்து அனுப்பவில்லை. ஓபிஎஸ்-ம் கொடுக்கவில்லை. இபிஎஸ்-ம் கொடுக்கவில்லை. மத்திய அரசு கேட்டு வாங்கினார்கள். வாங்கியதும் மோடி, அரசு விழாவில் அறிவித்தார். தேவேந்திரன் நரேந்திரன் மோடி என சொன்னார். பாராளுமன்றத்தில் பேசி அரசாணை வெளியிட்டார்கள். இதுதான் பெருமை” எனக் கூறினார்.