விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் DNT(சீர்மரபினர்) சமூகத்தினர், திருச்சியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்(ஸ்ரீரங்கம்) அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
DNT (De-Notified Tribes) ஒரே சான்றிதழ் வழங்க வேண்டும், DNT மக்களை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கமாநிலத் தலைவர் அய்யாக்கண்ணுதலைமையில், முத்தரையர் அரசியல் களம் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா முன்னிலையில், 100க்கும் மேற்பட்டDNT நிர்வாகிகள்ஒன்றிணைந்து,திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பல சாலை பகுதியில் உள்ளபிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதிஅலுவலகத்தில் இன்று (04.01.2021) காலை 11 மணி முதல்காத்திருப்புபோராட்டத்தில் ஈடுபட்டனர்.