எதிர்வரும் மக்களவை தேர்தலில் விசிக ஆந்திரபிரதேசம், கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிடுவதாக அதன் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

Advertisment

thiruma

அதன்படி ஆந்திர மாநிலத்தில் குண்டூர், சித்தூர் (தனி), திருப்பதி, ராஜம்பேட், கடப்பா உள்ளிட்ட தொகுதிகளிலும், கேரள மாநிலத்தில் இடுக்கி, கோட்டயம், கொல்லம் உள்ளிட்ட தொகுதிகளில் தனித்து போட்டியிடுகின்றது. திமுக வுடன் கூட்டணியில் தமிழகத்தின் 2 தொகுதிகளில் விசிக போட்டியிடுகின்றன. அதன்படி சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் தனி சின்னத்தில் போட்டியிடுகிறார். மற்றொரு தொகுதியான விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

Advertisment