Advertisment

சணல் கயிற்றில் கட்டப்பட்ட வாக்கு இயந்திரங்கள்...? அமைச்சர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

Voting machines built on hemp rope ...?

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளும் பின்னர் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 157 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 77 சட்டமன்றத் தொகுதிகளிலும் முன்னனியில் உள்ளது.

Advertisment

இந்நிலையில் அதிமுகசார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடும் விராலிமலை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 7 வது முறையாக மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. மின்னனுவாக்கு இயந்திரங்கள் சில சீல் வைக்கப்படாமல் சணல்கயிறு கொண்டு கட்டப்பட்டிருப்பதாகதிமுக முகவர்கள்அதிருப்தியடைந்த நிலையில் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisment

Pudukottai viralimalai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe