Skip to main content

“மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைய துரை வைகோவுக்கு வாக்களியுங்கள்” - அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Vote for Durai Vaiko to form India coalition government at center says Anbil Mahesh

திருச்சி தெற்கு மாவட்டம்,  கிழக்கு மாநகரம், கிழக்கு தொகுதியில் இந்திய கூட்டணியின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்  துரை வைகோவை  ஆதரித்து  மாநகர  செயலாளர்  மு.மதிவாணன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தலைமையில் தீவிர பிரச்சாரம் நடைபெற்றது .

திருச்சி பாலக்கரை ரவுண்டானா, ஜெயில் பேட்டை, குப்பாங்குளம் மேம்பாலம், சூசையப்பர் கோவில், உப்புபாறை, முஸ்லீம் தெரு, சகாயமாதா கோவில், வி. எம்.பேட்டை வளைவு,பஜனை கூடத்தெரு, தர்மநாதபுரம், மல்லிகைபுரம் மெயின் ரோடு, துரைசாமிபுரம், நாகநாதர் டீஸ்டால், தனமணி காலனி, கோவிந்த கோனார் தெரு, சங்கிலியாண்டபுரம் மெயின் ரோடு அரசமரம், கீழப்புதூர் நாகநாதர் டீ கடை காளியம்மன் கோவில், எடத்தெரு விறகு மந்தை வழி, ரெங்கசாமி பூங்கா, புதுத்தெரு, சபரி ஆஸ்பத்திரி சந்து,மோட்சராக்கினி கோவில், கெம்ஸ்டவுன்,சந்தியாகப்பர் பாளையம் வழி, செங்குளம் காலனிகாவேரி திரைஅரங்கம், உடையான்தோட்டம், பருப்புகாரத்தெரு மெயின்ரோடு, எடத்தெரு அண்ணாசிலை  ஆகிய பகுதிகளில்ம திமுக வேட்பாளர் துரை. வைகோவை ஆதரித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துரைவைகோவை ஆதரித்து பேசியதாவது:- மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம்,  உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண்கள் திட்டம், இலவச பேருந்து பயணம் தந்த விடியல் பயணம் என பல்வேறு திட்டங்களை தந்த நமது முதல்வரின் கரத்தை வலுப்படுத்தவும், வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணி வெற்றி பெற்றவுடன் சுங்கச்சாவடிகள் அகற்றப்படவும், பெட்ரோல் டீசல் விலை குறைக்கப் பெறவும், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் கேஸ் விலை பாதியாக குறைக்கவும், நீட் தேர்வில் இருந்து நம் குழந்தைகள் விலக்கு பெற்றிடவும் நம்முடைய வேட்பாளர் துரை. வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இந்நிகழ்வில்   துணை மேயர் திவ்யா, கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா, பகுதி செயலாளர் ராஜ் முகமது, வட்டக் கழக செயலாளர்கள் சேகர், நலங்கிள்ளி, சுரேஷ், தனுஸ்கோடி, சில்வியா, கருணாநிதி, கோவிந்தராஜ், எடிட்டன், ஞனசேகர், சீனிவாசன், மற்றும் திமுக துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார், மாநில தொண்டர் அணி ஆலோசகர் ஆ.பாஸ்கரசேதுபதி, மாநில ஆபத்து உதவிகள் அணிச் செயலாளர் சுமேஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து  கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.