Advertisment

ஒடிசா மாநிலத்தில் உள்ள செஞ்சூரியன் தொழில்நுட்ப மேலாண்மை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு சில தினங்களுக்கு முன்பு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சினிமா, கலாச்சாரம், கலை ஆகியவற்றில் கமல்ஹாசனின் பங்களிப்பை பாராட்டி, செஞ்சூரியன் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. இன்னிலையில், நேற்று(20.11.2019) சென்னை திரும்பிய கமல்ஹாசனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கோலாகல வரவேற்பு அளித்தனர்.