Advertisment

காங்கிரஸ் அலுவலகத்திற்கு பூட்டு போட்ட தொண்டர்கள்! 

Volunteers locked the Congress office!

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக ஜவஹர் இருந்து வந்தார். இந்நிலையில் அவரை மாற்றி ரெக்ஸ் என்பவரை மாநகர் மாவட்ட தலைவராக காங்கிரஸ் நியமித்தது. இதனை அக்கட்சியின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தி குறிப்பு வாயிலாக தெரிவித்திருந்தார். ரெக்ஸ், திருச்சி மாநகராட்சியின் 39வது வார்டு மாமன்ற உறுப்பினராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

மாநகர் மாவட்ட தலைவர் பொறுப்பு மாற்றப்பட்டு ரெக்ஸ் அறிவிக்கப்பட்டதும் அவர், திருச்சி காங்கிரஸ் எம்.பி.யான திருநாவுக்கரசரைமரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Advertisment

Volunteers locked the Congress office!

இந்நிலையில் திருநாவுக்கரசர் தான் தன்னுடைய ஆதரவாளான ரெக்ஸை மாநகர மாவட்ட தலைவராக பரிந்துரை செய்துள்ளார். தன்னிச்சையாக திருநாவுக்கரசர் செயல்படுகிறார் என குற்றம் சாட்டி ஜவகர் ஆதரவாளர்கள் இன்று திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

congress trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe